களுவாஞ்சிகுடியில் மரநடுகை திட்டத்தின் கீழ் பழமரத் தோட்டங்கள் அமைக்க நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் மரநடுகை திட்டத்தின் கீழ் பழமர தோட்டம் அமைக்கும் நிகழ்வு (22) பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் குருக்கள்மடம் அசீசி சிறுவர் இல்லத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலக பிரிவில் இந்த நிகழ்வினை பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச கிராம சேவை, சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ப. ராஜதிலகன் மற்றும் விதாதா வள நிலைய வெளிக்கள இணைப்பாளர் வ. பிரசாந்த் ஆகியோரினால் பழ மரநடுகை திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

இப் பழ மர தோட்டம் அமைக்கும் நிகழ்வில் 80 பயன் தரு மா, தோடை, மாதுளை, கொய்யா போன்ற பழ மரக்கன்றுகள் மற்றும் தென்னை மரங்களும் நடுகை செய்யப்பட்டன .

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் த. நிர்மலராஜ், அருட்சகோதரர் ஜெகன், அருட்தந்தை அம்றோஸ், நன்னிலம் சமூக நிறுவனத்தின் உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் இல்ல மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.