மேற்குவங்கம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயின்று வந்த இளங்கலை மாணவர், கடந்த 9-ம் தேதி பல்கலைக்கழக விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். விடுதியில் அவர் ராகிங் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக மாணவனின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 13 பேரை காவல்துறை கைதுசெய்திருக்கிறது. இந்த சம்பவம் மேற்கு வங்க அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Jadavpur_University_west.jpg)
இந்த நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சரியாக செயல்படவில்லை என எதிர்க்கட்சியான பா.ஜ.க. குற்றம்சாட்டிவருகிறது. இந்த நிலையில், விடுதியில் தங்கியிருந்தவர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறைக்குப் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை, “கல்லூரியில், குறிப்பாக மாணவர்கள் தங்கும் விடுதியில் ராகிங், சர்வ சாதாரணமாக நடந்திருக்கிறது.
ராகிங் செய்யப்பட்டதால் தற்கொலை செய்துகொண்ட மாணவனை, மற்ற மாணவர்களில் சிலர் நிர்வாணமாக்கி நடந்து வரக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். சுமார் ஒருமணி நேரமாகத் தொடர்ந்த அந்த ராகிங் கொடுமையிலிருந்து தப்பிக்க அவர் ஒவ்வொரு அறையாக ஓடி ஒளிந்திருக்கிறார். ராகிங் நடந்த போது அந்த மாணவரை தன்பாலின ஈர்ப்பாளர் எனக் கேலி கிண்டல் செய்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்தே மாணவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார் எனத் தெரிகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/F3pQvtxWcAEbFKB.jpg)
இந்த வழக்கு தொடர்பாக, இதுவரை கைதுசெய்யப்பட்ட 13 குற்றவாளிகளில்,12 பேருக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தைச் செயல்படுத்துவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது.
மாணவனை நிர்வாணமாக்கி அவமானப்படுத்திய சம்பவமும், ராகிங் விவகாரமும் தற்போது மேற்குவங்கத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY