69வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2021ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள் திரைப்பட விருதுகளுக்கு தகுதி பெற்றன.
இதில் தமிழில், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த ‘கடைசி விவசாயி’ திரைப்படம் பெற்றது. இப்படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டி அவர்களுக்கு ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பின்னணி இசை பாடகி விருது ‘இரவின் நிழல்- மாயவா சாயவா’ பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறும்படங்களுகானப் பிரிவில் எடிட்டர் பி.லெனின் இயக்கிய ‘சிற்பங்களின் சிற்பங்கள்’ திரைப்படம் சிறந்த கல்வித் திரைப்படத்திற்கான விருதையும், சிறந்த இசையமைப்பாளருக்கான ஸ்பெஷல் மென்ஷன் ‘கருவறை’ படத்திற்காக ஶ்ரீகாந்த் தேவாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இந்த தேசிய திரைப்பட விருதுகளில் 69வது அதிகமான விருதுகளைக் குவித்தத் திரைப்படங்கள் இவைதாம்.
-சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்
ஆர்.ஆர்.ஆர் (ராஜமெளலி)
-சிறந்த பின்னணி இசை – கீரவாணி
-சிறந்த பின்னணி இசை பாடகர் – கால பைரவா (பாடல்: Komuram Bheemudo )
-சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட் – வி.ஸ்ரீனிவாஸ் மோகன்
-சிறந்த ஸ்டண்ட் கோரியோகிராஃபி – கிங் சாலமன்
-சிறந்த நடன இயக்குநர் – பிரேம் ரக்ஷித்
சிறந்த நடிகை –ஆலியா பட்
சிறந்த படத்தொகுப்பு – சஞ்சய் லீலா பன்சாலி
சிறந்த ஒப்பனைக் கலைஞர் – ப்ரீதிஷீல் சிங் டிசோசா
சிறந்த திரைக்கதை – உத்கர்ஷினி வசிஷ்டா & பிரகாஷ் கபாடியா
சிறந்த இந்தி திரைப்படம் –‘சர்தார் உதம்’
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு –டிமிட்ரி மாலிச் & மான்சி துருவ் மேத்தா
சிறந்த ஒளிப்பதிவு
அவிக் முகோபாத்யாய்
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்
வீர கபூர்
தேசிய விருது கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தத் திரைப்படங்கள் மற்றும் நடிகளைக் கமென்டில் பதிவிடுங்கள்.