குருகிராம், ஹரியானாவில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை, போலீசார் நேற்று துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள நுாஹ் பகுதியில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஜூலை 31ல் பேரணி நடத்தினர். அப்போது ஒரு கும்பல் கல்வீசி தாக்கியது. இதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில், ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறை தொடர்பாக, 286 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இந்த கலவரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒசாமா, பெரோஸ்பூர் நாமக் பகுதியில் இருந்து அலிமியூ கிராமத்தை நோக்கி பைக்கில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரை பிடிக்க முயன்றனர்.
அப்போது போலீசார் மீது அவர் துப்பாக்கியால் சுட்டார். போலீசாரும் பதிலுக்கு சுட்டனர்.
இதில், ஒசாமாவுக்கு காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.
கீழே விழுந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement