வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முந்தைய, கட்சி வேட்பாளர் தேர்வுக்கான விவாதத்தில் அமெரிக்க வாழ் இந்தியரான விவேக் ராமசாமி சிறப்பாக பேசி, கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, குடியரசு கட்சியில் விண்ணப்பித்துள்ளார்.
ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நடக்க உள்ள நிலையில், அதை விட அந்த இரண்டு கட்சிகளிலும் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பதை தேர்வு செய்வதற்கான போட்டி கடுமையாக உள்ளது.
குடியரசு கட்சியின் சார்பில் களமிறங்க, எட்டு வேட்பாளர்கள் விவாதத்தில் பங்கேற்றனர். முதல் விவாதத்தில், சிறப்பாகப் பேசப்பட்ட வேட்பாளர்களில் ஒருவராக விவேக் ராமசாமி பிரகாசித்துள்ளார். சக போட்டியாளர்களால் அதிக தாக்குதல்களை எதிர்கொண்டும், சமயோசிதமாக பேசி தனது திறமையை நிரூபித்துள்ளார் விவேக்.
டிரம்பை விட அதிக பின்தங்கிய நிலையில் இருந்த விவேக், சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் முன்னேறி, ரான்டி சாண்டிஸ்க்கு நிகராக இரண்டாவது இடத்தில் காணப்படுகிறார்.
‘காலநிலை மாற்ற நிகழ்ச்சி நிரல் ஒரு புரளி’ என்ற கருத்துக்காக, அவர் அதிக விமர்சனத்தை சந்தித்தும், தனது வாதத்திறமையால் பலமான வேட்பாளராக முத்திரை பதித்து வருகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement