விளையாட்டு மற்றும் பயிற்சிகள் ஒரு தேசத்தின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு பங்களிக்கின்றன

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று (24) நடைபெற்ற 47வது தேசிய விளையாட்டுப் போட்டியின் அங்குரார்ப்பண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் இணைந்து நடத்தும் இந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் இவ்வருடம் 262 தங்கப் பதக்கங்களும், 262 வெள்ளிப் பதக்கங்களும், 360 வெண்கலப் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன. இந்த விளையாட்டுப் போட்டியில், ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 916 விளையாட்டு வீரர்கள் (464 ஆண்கள் மற்றும் 452 பெண்கள்) போட்டியிட உள்ளனர்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

விளையாட்டு மற்றும் பயிற்சிகள் ஒரு தேசத்தின் எதிர்கால அடித்தளத்திற்கும் ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் பங்களிக்கின்றன. விளையாட்டு வீரர்களான உங்கள் அனைவரையும் இலங்கை தேசம் எதிர்பார்த்துள்ளது. மரியாதை செலுத்துகிறது. அன்பை வெளிப்படுத்துகிறது. வரவேற்க காத்திருக்கிறது. இந்த நாட்டை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளை நாங்கள் மதிக்கிறோம். வெற்றி தோல்வியின் அடிப்படையில் செயற்படாமல் முயற்சி மற்றும் உறுதியுடன் செயற்படும் திறன் ஒரு சிறந்த பண்பு. விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மற்றும் கிராம மட்டம், பிரதேச செயலாளர் மட்டம் முதல் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்கள் வரை இந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நாம் மதிக்கிறோம்.

நிதி முகாமைத்துவ சவால்களுக்கு முகம்கொடுத்துள்ள ஒரு தேசம் மீண்டும் எழுச்சி பெற முடியும் என்பதை தைரியமாக உலகுக்குச் சொல்லும் வீரர்களால் நாடு பெருமை கொள்கிறது. கடந்த எட்டு மாதங்களில் பல பெருமைமிக்க வெற்றிகளை நமது விளையாட்டு வீரர்கள் பெற்றிருப்பது நாட்டுக்கு பெரும் பலம். பருத்தித் துறையிலிருந்து தேவேந்திர முனை வரையிலும், மேற்கிலிருந்து கிழக்கு வரையிலும் ஒருங்கிணைத்துச் செல்லும் 47வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை மிகவும் வலுவாக முன்னெடுத்துச் செல்ல விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் சக்தியும் தைரியமும் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டு இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க, விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஷேமால் பெர்னாண்டோ, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே. மகேசன், மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க, கொழும்பு மாவட்ட செயலாளர் கே. ஜி. விஜேசிறி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.