Youtube-ல் புதிய ‘Hum to Search’ டெக்னாலஜி! இனி பாடலை முணுமுணுத்தாலே போதும், கஷ்டப்பட்டு தேடல்லாம் வேண்டாம்..

நீங்கள் உங்கள் போனை அருகில் வைத்து கொண்டு திடீரென்று ஏதாவது பேசும்போது கூகுள் ஆன் ஆகி நீங்கள் ஏதாவது பேச விரும்புகிறீர்களா? அல்லது உங்களுக்கு என்ன தேட வேண்டும் என்று கேட்பதை பலமுறை பார்த்திருப்போம். உங்கள் குரலை வைத்து அதில் வரும் சொற்களை பெற்றுக்கொண்டு அது சம்மந்தமான தகவல்களை கூகுள் தேடி தரும் டெக்னாலஜி கடந்த 2020ம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது.

Youtube-ல் புது டெக்னாலஜி

அதே போன்றதொரு டெக்னாலஜியை யூட்யூப் நிறுவனமும் அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, நீங்கள் ஒரு பாடலின் இசை முணுமுணுத்தாலோ அல்லது ஏதாவது ஒரு வரியை பாடினாலோ அந்த கட்டளையை பெற்றுக்கொண்டு ஒரு சில நொடிகளில் அதற்கு ஒத்து போகும் முடிவுகளை உங்களுக்கு காட்டும்.

தற்போது, இந்த டெக்னாலஜியை யூட்யூபில் அறிமுகப்படுத்தும் சோதனையில் அந்நிறுவனம் இறங்கியுள்ளதாக Youtube அறிவித்துள்ளது. இதன்படி, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு குறிப்பில் பயனர்களும் இந்த சோதனையில் பங்குபெற்று இந்த புதிய அம்சத்தை சோதித்து பார்க்கலாம் என்று கூறியுள்ளது.

கூகுள் Vs யூட்யூப்

மேலும், கூகுள் நிறுவனத்தின் Hum to Search வசதி குறைந்தபட்சம் முடிவுகளை காட்ட 15 நொடிகள் எடுத்து கொண்டால், அதே டெக்னாலஜியை பயன்படுத்தி 3 நொடிகளில் முடிவுகளை காட்டும்படி யூட்யூப் வழிவகை செய்துள்ளது. இது யூட்யூப் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் என்றும் அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இனிமே மறந்து போன பாடல்களை யோசித்து புலம்ப வேண்டாம். வாயில் ட்யூன் போட்டே பிடித்தமான பாடலை கண்டறிந்து விடலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.