உத்தரபிரப்தேசத்தில், கடந்த ஆண்டு இரண்டு சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட சிறுவனுக்கு, போக்சோ நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்திருக்கிறது.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி, நிகாசன் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் கடத்தப்பட்ட இரண்டு சிறுமிகள், கரும்பத்தோட்டதிலுள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்டப்பட்டனர்.
பின்னர் நடந்த விசாரணையில், அந்த இரண்டு சிறுமிகளும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி, கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர் என்று தெரியவந்தது. அதையடுத்து இந்த வழக்கில் நான்கு பெரியவர்கள், இரண்டு சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர். அதைத்தொடர்ந்து சிறுவர்களைத் தவிர்த்து முதலில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட நால்வரில், சுனைத், சுனில் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், கரிமுதீன், ஆரிஃப் ஆகியோருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
பின்னர் இரண்டு சிறுவர்களில் ஒருவன், ஆகஸ்ட் 22-ம் தேதி குற்றவாளியென நிரூபிக்கப்பட்டதையடுத்து, கூடுதல் மாவட்ட நீதிபதி ராகுல் சிங் தலைமையிலான சிறார்களுக்கான சிறப்பு போக்ஸோ நீதிமன்றம் நேற்று அந்த சிறுவனுக்கு ரூ.46,000 அபராதத்துடன் ஆயுள் தண்டனை விதித்தது.
தண்டனை விவரம் குறித்து பேசிய அரசு தரப்பின் சிறப்பு வழக்கறிஞர் பிரிஜேஷ் குமார் பாண்டே, “இந்திய தண்டனைச் சட்டம் 302/34 பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம். பிரிவு 452-ன் கீழ் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம்.
பிரிவு 363-ன் கீழ் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம். பிரிவு 201-ன் கீழ் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம், பிரிவு 323-ன் கீழ் ஒரு வருடம் சிறை மற்றும் ரூ.1,000 அபராதம். போக்சோ சட்டத்தின் 5ஜி/6 பிரிவின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம்” என்று கூறினார்.
அதோடு, ஆறாவது குற்றவாளியான இன்னொரு சிறுவன் மீது சிறார் நீதி வாரியத்தில் விசாரணை நடந்து வருவதாக பிரிஜேஷ் குமார் பாண்டே தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY