கவுசாம்பி:உத்தரப் பிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்ட கூடுதல் எஸ்.பி., சமர் பகதூர் சிங் கூறியதாவது:
இங்கு வசிக்கும் 17 வயது சிறுமியின் அந்தரங்க படங்களை, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜெய்சிங் என்பவர் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார். அவற்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி, தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும், அந்தச் சிறுமியை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். பெற்றோர் தட்டிக் கேட்டபோது, கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதுறித்து, அவளது பெற்றோர் கொடுத்த புகார்படி ஜெய்சிங் உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆறு பேரையும் போலீசார் தேடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement