சஞ்சு சாம்சனை தூக்கிட்டு அஸ்வினை போடுங்க: எம்எஸ்கே பிரசாத் சொல்லும் 15 வீரர்கள்

விரைவில் இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இதில் தனது 15 பேர் கொண்ட அணியை இந்திய முன்னாள் தலைமை தேர்வாளர் வெங்கடேஷ் பிரசாத் அறிவித்துள்ளார். 2019 உலகக் கோப்பை அணியைத் தேர்ந்தெடுத்த குழுவின் தலைவரான பிரசாத், சஞ்சு சாம்சனுக்கு தனது அணியில் இடம் கொடுக்கவில்லை. ஆனால், அஸ்வினுக்கு ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுத்திருக்கிறார். சுவாரஸ்யமாக, அவர் தனது அணியில் ஒரு லெக் ஸ்பின்னரை மட்டுமே தேர்ந்தெடுத்திருக்கிறார்.

எம்எஸ்கே பிரசாத் அணியில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகிய இரு தொடக்க ஆட்டக்காரர்கள். ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் வெங்கடேஷ் பிரசாத் அணியில் உள்ள வீரர்கள். அவரது தேர்வுகளில் மிகவும் ஆச்சரியப்படக்கூடியது என்னவென்றால் அஸ்வின். மூத்த சுழற்பந்து வீச்சாளரான அவருக்கு ஜனவரி 2022 முதல் இந்திய ODI அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தேர்வு செய்யப்படும் அஸ்வின் 20 ஓவர் இந்திய அணிக்கும் பரிசீலிக்கப்படவில்லை.  2019 உலகக் கோப்பைக்கும் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருந்தார். 

அதேபோல், சஞ்சு சாம்சனை விட எம்எஸ்கே பிரசாத், இஷான் கிஷனை இரண்டாவது தேர்வு விக்கெட் கீப்பராக தேர்வு செய்தார். இஷான் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்று அரை சதங்களுடன் தனது இடத்தை உறுதிப்படுத்தினார். ஆசிய கோப்பை அணியில் ஒரு அங்கமாக உள்ளார். அவர் WC அணியிலும் இடம் பெறுவார் என்று தெரிகிறது. சாம்சனைப் பொறுத்தவரை, அவர் ஆசியக் கோப்பையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். கே.எல் ராகுல் வருகையால் சாம்சனின் இடம் முடிவுக்கு வந்திருக்கிறது. 

2023 உலகக் கோப்பைக்கான தங்கள் அணியை செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் அறிவிக்க வேண்டும். செப்டம்பர் 27 ஆம் தேதிக்குள் அவர்கள் அணியில் மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.

2023 உலகக் கோப்பைக்கான எம்எஸ்கே பிரசாத்தின் 15 பேர் கொண்ட அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (WK), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஆர் அஷ்வின், குல்தீப், குல்தீப் யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், இஷான் கிஷன் (WK)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.