சந்திரயான் 3 சக்சஸ்… அடுத்து ஆதித்யா எல்1… சூரியனுக்கு குறி வைக்கும் இஸ்ரோ… தேதி குறிச்சாச்சு!

சூரியன் குறித்து ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை அனுப்புகிறது இஸ்ரோ.

சந்திரயான் 3இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதனை தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.நிலவில் நடைபோடும் இந்தியாஅதனை தொடர்ந்து லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவரும் நிலவின் தென் துருவத்தில் இறங்கி தனது பணியை தொடங்கியுள்ளது. இதுதொடர்பான அப்டேட்டுகளையும் லேண்டர் மற்றும் ரோவரின் செயல்பாடுகளையும் இஸ்ரோ தொடர்ந்து மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறது.
​ எமிரேட்ஸ் டிராவில் இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்… ஒரே நாளில் மாறிய வாழ்க்கை!​சூரியனுக்கு குறிசந்திரனில் ஆய்வு செய்யும் சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து நிலவுக்கு குறி வைத்துள்ளது இஸ்ரோ. அடுத்த கனவு திட்டமான சூரிய திட்டத்தை செயல்படுத்தும் பணியில் தீவிரமாக உள்ளது இஸ்ரோ. அதன்படி சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ.
​ ‘சிவசக்தி பாயிண்டில்’ இருந்து 360 டிகிரியில் நிலவின் ரகசியங்களை தேடும் பிரக்யான் ரோவர்!​தேதி குறிச்சாச்சுஇதற்காக செப்டம்பர் 2 தேதியை குறித்துள்ளது இஸ்ரோ. இதுகுறித்து பேசியுள்ள அகமதாபாத் விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனர் நிலேஷ் எம்.தேசாய் , ஆதித்யா-எல்1 தயார் நிலையில் உள்ளதாகவும் செப்டம்பர் 2 ஆம் தேதி விண்ணில் ஏவ வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.​ திருப்பதியில் மிகப்பெரிய மாற்றம்: தேவஸ்தானத்தின் முழு கன்ட்ரோலும் இனிமே இவங்கக்கிட்டதான் – ஜெகன் போட்ட ஆர்டர்!​
லெக்ராஞ்சியன் புள்ளிஇந்த ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-ல் நிலைநிறுத்தப்பட உள்ளது. லெக்ராஞ்சியன் புள்ளி 1-ல் நிலை நிறுத்தப்படும் இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் அதன்பிறகு திட்டமிட்டப்படி ஆய்வு பணியை தொடங்கும்.பி.எஸ்.எல்.வி ராக்கெட்ஆதித்யா விண்கலத்தின் சோதனைகள் கடந்த 2020-ம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் வரும் 2ஆம் தேதி இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஏவப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சூரிய புயல்கள் மற்றும் பூமியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.
​ நெருங்கும் வடகிழக்கு பருவமழை… அதிரடி ஆக்ஷனில் இறங்கிய மின்வாரியம்!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.