KSRTCக்கு வந்த தட்டுப்பாடு… பழைய பஸ்ஸில் புது பிளான்… 200 வேணுமாம், ஓடிவந்த BMTC!

KSRTC என்றதும் கர்நாடகா, கேரளா என இரண்டு மாநிலங்கள் நினைவுக்கு வரும். ஏனெனில் இவை இரண்டின் மாநில அரசு போக்குவரத்து கழகத்தை மேற்கண்ட வகையில் தான் அழைப்பர். இனி கர்நாடகா KSRTC விஷயத்திற்கு வருவோம். கர்நாடகா மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு பேருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சக்தி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச பேருந்து பயண வசதியை மாநில அரசு அமல்படுத்தி உள்ளது.

அரசு பேருந்துகளின் தேவைஇதனால் நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. புதிதாக ஒவ்வொரு வழித்தடத்திலும் பேருந்துகளின் தேவையும் கூடியுள்ளது. ஆனால் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் மாநில அரசிடம் இருந்து போதிய நிதியுதவி கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் பெரிய அளவில் புதிய பேருந்துகள் எதுவும் கொள்முதல் செய்யப்படவில்லை. தற்போதும் நிதி ஒதுக்கீடு செய்ய கர்நாடகா அரசு தயாராக இல்லை.பழைய பேருந்துகள் தான் கதிஎனவே தான் பழைய பேருந்துகளின் உபயோகத்தை மேலும் நீட்டிக்க வேண்டியுள்ளது. கர்நாடகா மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் பேருந்துகள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் கிலோமீட்டர் வரை இயக்கப்படுகின்றன. அதன்படி, தற்போது இயக்கப்பட்டு வரும் 1,812 பேருந்துகளில் 13 லட்சம் கிலோமீட்டருக்கு மேல் ஓடிவிட்டன. மொத்தமுள்ள 8,094 பேருந்துகளில் வெறும் 130 மட்டுமே 3 லட்சம் கிலோமீட்டருக்கு கீழ் பயணம் செய்துள்ளன.
புதுப்பிக்கும் ஏற்பாடுகள்அப்படி பார்த்தால் பழைய பேருந்துகள் தான் ஏராளமாக இருக்கின்றன. இவை பாதுகாப்பு விஷயத்தில் கைவைக்க வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பழைய பேருந்துகளை புதுப்பிக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதற்காக 580 பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன் செலவு என்பது குறைவு என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. இத்தகைய நடவடிக்கை மூலம் கூடுதலாக 4 முதல் 5 ஆண்டுகள் வரை அரசு பேருந்துகளை பயன்படுத்தலாம்.
பெங்களூரு போக்குவரத்து கழக உதவிகூடவே அரசுக்கு செலவீனத்தையும் குறைக்கலாம். இதுதொடர்பாக பேசிய KSRTC மேலாண் இயக்குநர் வி.அன்புகுமார், தற்போதைக்கு பழைய பேருந்துகளை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். கூடுதலாக தேவைப்படும் பேருந்துகளுக்கு பெங்களூரு மாநகர போக்குவரத்து கழத்தின் (BMTC) உதவியை நாட இருக்கிறோம்.
​எவ்வளவு செலவாகும் தெரியுமா?அதில் 7 முதல் 8 லட்சம் கிலோமீட்டர் தூரம் ஓடிய நல்ல நிலையில் இருக்கும் பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளோம். இவை உரிய தகுதி சான்று பெறப்பட்ட பின்னரே வாங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. இவை வாங்கப்பட்ட பின்னர் எங்களின் பணிமனையில் வைத்து புதுப்பிக்கப்படும். இதற்கு 3 முதல் 4 லட்சம் வரை செலவாகும் எனத் தெரிகிறது.
​200 பேருந்துகள் வாங்க முடிவுமேற்குறிப்பிட்ட தொகையை எங்களால் சமாளிக்க முடியும். ஆனால் புதிய பேருந்து வாங்க 30 லட்சம் வரை செலவாகும். அதுமட்டுமின்றி டெண்டர் விட்டு அதற்கான நடைமுறைகளை முடித்து பேருந்துகள் வாங்குவதற்கு சில மாதங்கள் ஆகிவிடும். தற்போதைக்கு BMTC-யிடம் இருந்து 200 பழைய பேருந்துகளை வாங்க இருக்கிறோம். இவை மைசூரு, துமகுரு, தாவனகரே ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.