அதிமுக மாநாடு, தனிக்கட்சி போன்ற விஷயங்கள் குறித்து செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார்.
அதிமுகவில் 2017ஆம் ஆண்டு சசிகலா சிறை சென்ற பிறகு
மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன. ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை இழந்தது. அதன்பிறகு அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் அவ்வப்போது எழுவதும் அடங்குவதுமாக இருந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒற்றை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.
அப்போது, பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமிதான் ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், இதற்கு ஓ.பன்னீர்செல்வம் சம்மதம் தெரிவிக்கவில்லை. பொதுக்குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவரை நோக்கி வாட்டர் பாட்டில்களும் வீசப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 2022 ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தனர். அத்துடன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். பொதுக் குழுவை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது.
இதனிடையே அதிமுகவில் உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுப்பட்டார். கடந்த 20ஆம் தேதி நடந்த அதிமுக பொன்விழா மாநாடும் எடப்பாடி பழனிசாமிக்குதான் கட்சியில் செல்வாக்கு உள்ளது என்பதை தெரியப்படுத்தியது. இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கிலும் உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய
ஸிடம், அதிமுக மாநாடு எப்படி இருந்தது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவரோ, “புளியோதரை எப்படி இருந்தது” என சிரித்தபடி எதிர் கேள்வி எழுப்பினார். மேலும், புளியோதரை எப்படி இருந்ததோ அதுபோலதான் மாநாடும் இருந்தது என்றார். அதிமுக மாநாட்டில் உணவு சர்ச்சை எழுந்த நிலையில் அதனை கலாய்த்து இவ்வாறு கருத்து தெரிவித்தார் ஓபிஎஸ்.
தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவதாக தகவல்கள் வருகிறதே என்ற கேள்விக்கு, “சஸ்பென்ஸ்.. பொறுமையாக இருங்கள்” என்றும் கூறினார். பொதுக்குழு தீர்மானம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றம் செல்லவுள்ளார் என்றும் அங்கு கிடைக்கும் தீர்ப்பின் அடிப்படையில்தான் அவருடைய அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.