![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1693143432_NTLRG_20230827123335098854.jpg)
ஜவான் டிரைலர் குறித்து ஷாருக்கான் வெளியிட்ட தகவல்!
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ஜவான். அவருடன் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய்சேதுபதி, யோகிபாபு என பலர் நடித்துள்ளனர். வருகிற செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வரவுள்ள ஜவான் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ஷாருக்கான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், நேற்று ஜவான் படத்தின் மூன்றாவது பாடலின் சிறிய காட்சியை வெளியிட்ட ஷாருக்கான், விரைவில் டிரைலர் வெளியாகும், அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதனால் இன்னும் சில தினங்களில் டிரைலர் வெளியாகும் என்று தெரிகிறது. மேலும், ஜவான் படத்திற்காக அனிருத் இசையில் உருவான இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது.