சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேசிய நல்லாசிரியராகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இருந்து 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகி இருக்கும் […]