நியூயார்க்கில் ரயில் பயணத்தின்போது, தன் தோள் மேல் தூங்கி விழுந்த நபரை, சக பயணி ஆக்ரோஷமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரயில், பெர்க்சர் சுரங்கத்தில் சென்றபோது நடந்த இந்தச் சம்பவம், பயணிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சக பயணியிடம் ஒருவர் ஆத்திரமடைந்து கத்தி, தகாத வார்த்தைகளில் திட்டி வேறு இடத்துக்குச் சென்று அமருமாறு கூறியிருக்கிறார். உறங்கிக் கொண்டிருந்த அவர், ஏதோ சொல்ல முயன்ற நிலையில், தனது கை முட்டியால் அவரை முகத்தில் வேகமாகத் தாக்கியிருக்கிறார் அந்த நபர்.
இதனையடுத்து அவர் மயக்க நிலைக்குச் சென்ற நிலையில், தாக்குதலுக்குள்ளான நபரின் நண்பர் வந்து தாக்குதலில் ஈடுபட்ட நபரைத் தாக்கியிருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்ள, ரயிலிலிருந்து பயணிகள் அலறியிருக்கின்றனர். பின்னர் ரயில் நிறுத்தப்பட்டு காவலர்கள் உடனடியாக விரைந்து, இருவரையும் விலக்கியிருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய ரயில்வே அதிகாரிகள், “ஃபாரஸ்ட் ஹில் 71-வது அவன்யூ நிறுத்தத்திற்கு வடதிசை நோக்கி F1 ரயில் செல்லும்போது, காலை 5:30 மணி அளவில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. தன்மீது தூங்கி விழுந்த இளைஞருடன் வாக்குவாதம் செய்த அந்த நபர், ஒருகட்டத்தில் திடீரென தாக்குதலில் ஈடுபட்டார். அதில் அந்த இளைஞர் நிலைகுலைந்து போனார்.
New York man elbows another passenger on the subway #subwaycreatures #nyc #frailego pic.twitter.com/N6KX6ltBIz
— Rama (@EyesWitness00) August 24, 2023
உடனடியாக காயப்பட்டவரின் நண்பர், அவரைத் தாக்கிய நபருடன் மோதலில் ஈடுபட்டார். இந்த மோதல் நீண்டநேரம் நீடிக்கவில்லை. ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, மோதலில் ஈடுபட்டவர்கள் இறக்கப்பட்டுவிட்டனர். பிற பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தாக்குதலில் காயமடைந்த நபருக்கு மருத்துவ உதவிகளைச் செய்ய முன்வந்தோம். ஆனால், அவர் ஏற்க மறுத்துவிட்டார். தாக்குதலில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து ஓடிவிட்டார். அவரைத் தீவிரமாகத் தேடி வருகிறோம்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY