![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1693159455_NTLRG_20230827130734100435.jpg)
கேரளாவில் 50 கோடி வசூல் கடந்த முதல் தமிழ் படம் 'ஜெயிலர்'
ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் 10ல் வெளிவந்த படம் 'ஜெயிலர்'. இப்படம் தமிழகத்தைத் தவிர மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கேரளாவில் அதிக அளவிலான தியேட்டர்களில் வெளியான இந்தப் படம் தற்போது 50 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதுவரையிலும் எந்த ஒரு தமிழ்ப் படமும் அங்கு 50 கோடி வசூலைப் பெற்றதில்லை. முதல் முறையாக 'ஜெயிலர்' அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
மலையாளப் படங்களான '2018' படம் 89 கோடியும், 'புலி முருகன்' படம் 85 கோடியும், 'லூசிபர்' படம் 67 கோடியும் கேரளாவில் வசூலித்து சாதனை புரிந்துள்ளது. 'பாகுபலி 2' 75 கோடியும், 'கேஜிஎப் 2' 68 கோடியும் வசூலித்துள்ளது. அப்படங்களுக்குப் பிறகு 50 கோடி வசூலைக் கடந்த படமாக 'ஜெயிலர்' அப்பட்டியலில் இணைந்துள்ளது.