அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு முறை குற்றவாளி என்று தண்டிக்கப்பட்ட நிலையில் கடுமையான தண்டனை எதுவும் விதிக்கப்படாமல் ஜாமீனில் வெளியில் உள்ளார். வியாழனன்று ஒரு வழக்கு தொடர்பாக குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட டிரம்ப் காவல்துறையிடம் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து முதல் முறையாக அவரை குற்றவாளியென அறிவித்து அவரது புகைப்படத்தை புல்டன் கவுண்டி காவல்துறை வெளியிட்டதுடன் மற்ற குற்றவாளிகளுடன் சேர்த்து அவரது புகைப்படத்தையும் விளம்பரப்படுத்தியுள்ளது. […]