தென்னிந்திய சினிமாவிலே தற்போது இரண்டாம் பாகத்திற்கான மவுசு எகிறியுள்ளது. இதனால் பல வெற்றி படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகுவதுடன், தற்போது வெளியாகும் படங்களும் அடுத்த பார்ட்டிற்கான லீடுடனே முடிக்கப்பபடுகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹிட் படமான ‘சந்திரமுகி’ படத்திற்கான இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்து முடிந்தது. இவ்விழாவை காண ஆர்வமுடன் வந்திருந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கும், அங்கிருந்த பவுன்சர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பவுன்சர்கள் கூட்டாக சேர்ந்து கொண்டு, அந்த மாணவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இது சம்பந்தமான வீடியோ வெளியாகி அனைவர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்விற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சந்திரமுகி 2’ இசை வெளியீட்டு விழாவில், பவுன்சர்கள், கல்லூரி மாணவர் ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதுக்குறித்து எனக்கு இப்போதுதான் தெரிய வந்தது.
இந்த சம்பவம் ஆங்க்குக்கு வெளியே நடந்த காரணத்தால் நானோ, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ இந்த சம்பவம் குறித்து அறிந்திருக்கவில்லை. நான் எந்தளவுக்கு மாணவர்களை நேசிக்கிறேன் என்பதும், அவர்கள் வளர வேண்டும் என நான் நினைப்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதுபோன்ற சண்டைகளுக்கு எதிரானவன் நான். நான் எப்போதும் நாம் செல்லும் இடங்களில் எல்லாம் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
Chandramukhi 2: ‘லக.. லக.. லக’: வேட்டையனை தொடர்ந்து சந்திரமுகியின் என்ட்ரி..!
எந்த காரணமாக இருந்தாலும் ஒருவரை அடிப்பது கண்டிப்பாக தவறான விஷயம். அதிலும் மாணவர் ஒருவருக்கு இது நடந்திருக்க கூடாது. இந்த சம்பவத்திற்கு தனிப்பட்ட முறையில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் இது போன்ற செயல்களில் பவுன்சர்கள் ஈடுபட வேண்டாம் என்று மனதார கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் லாரன்ஸ்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி இமாலய வெற்றி பெற்ற ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் தற்போது ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். முதல் பாகத்தை இயக்கிய பி. வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சந்திரமுகி 2’ படம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Chandramukhi 2: வேட்டையன் ராஜாவாக மிரள விடும் ராகவா லாரன்ஸ்: பராக்.. பராக்..!