நிலவுக்கு ஜப்பான் அனுப்பும் ஸ்லிம் விண்கலம் ஏவுதல் நிறுத்தி வைப்பு| Japan suspends H-IIA rocket launch for moonshot because of strong winds

டோக்கியோ: ஜப்பான் சார்பில் ‘ஸ்லிம்’ என்ற விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ரஷ்யா சார்பில் லூனா-25 மற்றும் இந்தியா சார்பில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் லூனா-25 தோல்வியடைந்தது; சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் கால்பதித்தது. இந்த நிலையில் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்ஸா, ‘ஸ்லிம்’ எனப்படும் விண்கலத்தை நிலவில் ஆய்வு செய்ய தயாராகி வந்தது. இந்த விண்கலம் எடை குறைந்த லேண்டர் மற்றும் எக்ஸ்ரே இமேஜிங் செயற்கைக்கோளுடன் ஆக.,26ம் தேதி ஏவ உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அன்றைய தினம் மோசமான வானிலை காரணமாக ஆக.,28ம் தேதிக்கு (இன்று) மாற்றி அறிவித்தனர். அதன்படி இந்திய நேரப்படி இன்று காலை 9:26 மணிக்கு விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. புதிய தேதியை ஜப்பானின் ‘ஜாக்ஸா’ நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.