நிலவை குறிவைத்த ஜப்பான்: மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் திட்டம் – என்ன காரணம்?

ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா நிலவுக்கு ஸ்லிம் என்ற விண்கலத்தை அனுப்ப இருந்த நிலையில் அந்த முடிவை மீண்டும் தள்ளி வைத்துள்ளது.

உலக நாடுகளின் ஆராய்ச்சியாளர்களின் கவனம் செவ்வாய் கிரகத்தை நோக்கி இருந்த நிலையில் இந்தியா செவ்வாய் கிரகத்தை விட நிலவில் ஆய்வு மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்து அதற்கான பணிகளை செயல்படுத்தி வந்தது. அதன் பலனாக நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பது தெரிய வந்தது.

சந்திரயான் 1, சந்திரயான் 2 க்குப் பிறகு சந்திரயான் 3 கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியது.

மகளிர் உரிமைத் தொகையில் முக்கிய தளர்வு: கடைசி நேரத்தில் ஸ்டாலின் அறிவிப்பு!

விண்கலத்திலிருந்து பிரிந்து வந்த விக்ரம் லேண்டர் தரையிறங்கிய நிகழ்வை உலகமே வியப்புடன் பார்த்தது. லேண்டரிலிருந்து வெளி வந்த பிரக்யான் ரோவர் நிலவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இதன்மூலம் நிலவில் கால் பதித்த நான்காவது நாடு என்றும் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்றும் இந்தியா பெயர் பெற்றது.

சந்திரயான் 3 சக்சஸ்-காக மன்னார்குடி மகளிர் கல்லூரி மாணவர்கள் சிறப்பு பிரார்த்தனை..

இந்தியாவை போல ரஷ்யாவும் நிலவின் தெந்துருவத்தை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டிருந்தது. அந்த வகையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி லூனா 25 என்ற விண்கலத்தை ரஷ்யா செலுத்தியது. சந்திரயான் 3 தரை இறங்குவதற்கு முன்னரே லூனா 25 தரை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக இலக்கை அடைவதற்கு சிறிது தூரத்திற்கு முன்னர் சிக்னல் கட் ஆனது. இதனால் அது நிலவில் மோதி விழுந்தது.

மீண்டும் ஃபார்முக்கு வந்த பிடிஆர்… அரசுக்கு சொன்ன பலே யோசனை – ஏற்பாரா முதல்வர்?

இந்த சூழலில் ஜப்பானும் நிலவுக்கு விண்கலத்தை அனுப்புவதற்கான முயற்சியில் இறங்கி வந்தது. ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா நிலவுக்கு ஸ்லிம் எனும் விண்கலத்தை ஆகஸ்ட் 27ஆம் தேதி தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து செலுத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் மோசமான வானிலை காரணமாக விண்கலத்தை ஏவும் திட்டத்தை (இன்று) ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. ஆனால் இன்றும் மோசமான வானிலை நிலவுவதால் ஸ்லிம் விண்கலம் ஏவப்படுவது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து எப்போது விண்கலம் செலுத்தப்படும் என்பது குறித்த தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.