சுகாதார சேவைகள் மற்றும் மருந்து போன்றவை மக்களின் வாழ்க்கையுடன் பிண்ணிப் பிணைந்த முடிவில்லாத துறையாக செயற்படும் போது சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் முகாமைத்துவம் என்பன முதன்மையாக செல்வாக்குச் செலுத்தும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
மருந்துகளை உற்பத்தி செய்தல், தரப்படுத்துதல், ஒழுங்கமைத்தல், வழங்குதல், விநியோகித்தல் என்பன தொடர்பாக சுகாதார அமைச்சின் சகல நிறுவனங்களின் தலைவர்களுடன் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுகாதார மற்றும் மருந்துத் துறையில் இடம்பெறும் ஒவ்வொரு செயற்பாட்டிலும் தொடர் கண்காணிப்பு மிகவும் முக்கியமானவை எனவும் அதன் ஊடாக அங்கு விநியோக வலையமைப்பை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு முடியும் எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புகவெல்ல சுட்டிக்காட்டினார்.
இதன்போது மருந்து விநியோகப் பிரிவு, தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை, அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், அரசாங்க ஒளடதங்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சகல நிறுவனங்களினதும் அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறுகிய அரசியல் மற்றும் குறுகிய அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதால் பாரிய மாற்றங்கள் காணப்படுவதுடன் அதனால் நிறுவனங்கள் தமது பொறுப்புக்களை சரியாக மேற்கொள்வதுடன் பாரிய அர்ப்பணிப்புக்கள் மற்றும் எவ்வாறான தடைகள் ஏற்பட்டாலும் அவற்றின் பெறுபேறுகள் நாட்டின் சகல மக்களுக்கும் உரித்தானவை என அமைச்சர் இதன்போது விபரித்தார்.
தற்போது மருந்துத் துறையில் நிதிப் பிரச்சினைகள் பாரிய அளவில் முற்றுப் பெற்றுள்ளதாகவும், வரவு செலவுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நிதியை விட 65 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திறைசேரி சுகாதாரத் துறைக்காக முன்னுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்குப் பொருத்தமான நிறுவனங்கள் பிரதான பணிகளை இதில் பாரிய முன்னுரிமை குறித்த அவதானத்துடன் செயற்படுவதாகவும் சுகாதார அமைச்சர் இங்கு தெளிவுபடுத்தினார்.
சுகாதாரத் துறையில் செயற்படும் போது சகலரும் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அதன்போது கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் அதன் பிரதான நோக்கை அடையும் போது எவ்வாறான சவால்கள், எச்சரிக்கைகள் வரும் போது அதன் வெற்றிகரமான பெறுபேற்றை அடைந்து கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீசந்திரகுப்தா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, மேலதிக செயலாளர்களான வைத்தியர் சமன் ரத்னாயக, வை. எல். எம். நவவி, அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தபானத்தின் தலைவர் வைத்தியர் யு. ஏ. மென்டிஸ், அரசாங்க மருந்துகள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், உத்பல இந்திரவங்க, தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பேராசிரியர் எஸ். டி. ஜயரத்ன, ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்ட முகாமையாளர் வைத்தியர் அனில் திசாநாயக, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (சிகிச்சை வழங்கல் பிரிவு) வைத்தியர் டி. ஆர். கே. ஹேரத் உட்பட சகல சுகாதார மற்றும் மருந்துத் துறைகளில் துறை சார்ந்தவர்கள், தலைவர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.