கவின் புதிய படம் அறிவிப்பு
'கனா காணும் காலங்கள்' தொடர் மூலம் புகழ் பெற்றவர் கவின். அதன்பின்னர், சரவணன் மீனாட்சி, தாயுமானவன் போன்ற தொடர்களிலும் நடித்தார். 2017ம் ஆண்டில் 'சத்ரியன்' படத்தில் துணை நடிகராக பெரிய திரையிலும் அறிமுகம் ஆனார். நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோ ஆனார். 'டாடா' படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. சமீபத்தில் தன் காதலி மோனிகா டேவிட்டை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கவின் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கிய இளன் இயக்குகிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்விசிசி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதுவும் ரொமான்டிக் காமெடி படமாக உருவாகிறது. படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியிடப்பட இருக்கிறது.