பாறையை தள்ளியதும் தங்க புதையல்… 3 பேர் போட்ட தில்லாலங்கடி பிளான்… உல்ட்டாவான நெல்லூர் சம்பவம்!

ஆந்திர மாநிலம் நெல்லூரை அடுத்த சித்தேபள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மூன்று பேர் தேன் எடுக்க கடந்த சில வாரங்களுக்கு முன்பு அருகிலுள்ள மலைப் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது மலையில் இருந்த பழங்கால கோயிலுக்கு அருகில் சென்றனர். இந்த சூழலில் அங்கிருந்த பாறைகளை நோட்டமிட்டனர். அப்போது பாறை ஒன்றின் கீழ் பித்தளை காசுகள் இருந்தன. இதைக் கண்டதும் ஆச்சரியம் அடைந்து மேலும் ஆராய்ந்தனர்.

மலை கோயிலில் புதையல்

அருகிலிருந்த பாறையை அகற்றி விட்டு மண்ணை தோண்டியுள்ளனர். இதில் மேலும் சில காசுகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து தோண்டி பார்க்கையில் ஆச்சரியம் காத்திருந்தது. தங்க காசுகள் தென்பட்டன. புதையல், புதையல் என மூன்று பேரும் உற்சாகமடைந்தனர். ஏராளமான தங்க காசுகள் இருப்பதை அறிந்து அனைத்தையும் தோண்டி எடுக்க ஆரம்பித்தனர். இதற்கிடையில் ஆடு மேய்க்க இருவர் அந்த பக்கமாக வந்துள்ளனர்.

நெல்லூர் அருகே ஆச்சரியம்

அவர்கள் தங்க காசுகள் தோண்டுவதை பார்த்தனர். உடனே அந்த இருவரையும் மூன்று இளைஞர்களும் மிரட்டி விரட்டி அடித்துள்ளனர். வெளியே சொன்னால் அவ்வளவு தான் என்ற தொனியில் பேசி அனுப்பி வைத்தனர். இதையடுத்து தங்களுக்கு கிடைத்த தங்க காசுகள் உடன் மூவரும் புறப்பட்டு சென்றனர். இதை வெளியில் சொன்னால் மாட்டிக் கொள்வோம். எனவே தங்க காசுகளை உருக்கி விற்றுவிட திட்டமிட்டனர்.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உருக்கி விற்று சொகுசு வாழ்க்கை

அவ்வாறே தங்க காசுகளை உருக்கி கடை வீதிக்கு சென்று ரகசியமாக விற்றுள்ளனர். இந்த தங்கத்தை தங்களின் மூதாதையர்கள் பல ஆண்டுகளாக பத்திரமாக வைத்திருந்ததாக பொய் கூறினர். விற்ற தங்கத்தின் மூலம் 9 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. அதை கொண்டு கார், ஆட்டோ என சொகுசு வாழ்க்கை வாழத் தொடங்கினர். கையில் ரொக்கமாகவும் பல லட்ச ரூபாய் வைத்திருந்தனர். கிராம வங்கியில் தாங்கள் வாங்கிய கடனையும் அடைத்தனர்.

போலீசார் அதிரடி

இதற்கிடையில் மிரட்டி அனுப்பப்பட்ட இரண்டு பேரும் போலீசில் சென்று புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மூவரின் நடமாட்டத்தையும் தொடர்ந்து கண்காணிக்க தொடங்கினர். திடீரென அதிகப்படியான பணம் எங்கிருந்து வந்தது எனக் கேள்வி எழுந்தது. தக்க சமயம் பார்த்து மூவரையும் பிடித்து விசாரித்ததில் உண்மையை உளறிவிட்டனர். அவர்களிடம் இருந்து 490 கிராம் தங்கம், 280 கிராம் தங்கக் காசுகள், கார், ஆட்டோ, ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜயநகர பேரரசை சேர்ந்தது

அஜித், அமர், வெங்கடேஷ்வர் என மூவரையும் கைது செய்தனர். இந்நிலையில் தங்க காசுகளை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பழங்கால விஜயநகர பேரரசை சேர்ந்த தங்க காசுகள் எனக் கண்டறியப்பட்டது. இது 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. இவை புதையலாக பாறைக்கு இடையில் புதைந்திருந்து தற்போது வெளியே வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.