லைகா தயாரிப்பில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விஜய் இயக்குநராகக் களமிறங்குகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். அவரின் மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் திரைக்கதை எழுதுவது குறித்து படித்து வந்தார். இந்நிலையில் அவர் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்தை தயாரிக்க இருப்பதாக லைகா தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
லைகா தயாரிப்பு நிறுவனம் தமிழின் முன்னணி நடிகர்கள் நடித்த பல படங்களைத் தயாரித்திருக்கிறது. நடிகர் விஜய் தயாரித்த கத்தி படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனது தயாரிப்புப் பணியைத் தொடங்கியது. தொடர்ந்து பல படங்களைத் தயாரித்த இந்நிறுவனம் ரஜினி காந்த் நடிப்பில் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தை தயாரித்தது. பொன்னியின் செல்வன் பார்ட் 1 மற்றும் பார்ட் 2 இரண்டு படங்களையும் சமீபத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக லைகா தயாரிப்பு நிறுவனம் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தை தாங்கள் தயாரிப்பதாக அறிவித்திருக்கிறது. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் திரைக்கதை எழுதுவது குறித்த படிப்பை படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்து அறிவித்திருந்த தயாரிப்பு நிறுவனம், ஜேசன் விஜய் சொன்ன கதை சுவாரஸ்யமாக இருந்தது எனவும், படத்தில் பணிபுரியும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தனர்.