வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வரும் செப்டம்பர் 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று கேபிள் இல்லாமல் இன்டர்நெட் (ஜியோ ஏர் பைபர்) சேவை துவங்கப்படும் என தொழில் அதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். கேபிள் இல்லாமல் அல்ட்ரா வேகத்தில் இணைய சேவை நடைமுறைக்கு வர உள்ளது.
கடந்த ஆண்டு நடந்த பொதுக் கூட்டத்தின்போது ரிலையன்ஸ் ஜியோவின் 5 ஜி சேவை மற்றும் அதன் விரிவாக்கம் குறித்த அறிவிப்பு வெளிவந்தது. இந்நிலையில், இன்று(ஆகஸ்ட்., 28) நடந்த பொதுக்கூட்டத்தில் “ஜியோ ஏர் பைபர் சேவை” செப்டம்பர் 19ம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ ஏர் பைபர் சேவை
ஜியோ ஏர் பைபர் என்பது கேபிள் இல்லாமல் அல்ட்ரா வேகத்தில் இணைய சேவையை வழங்கும் முறை. இதுவரை எந்த நிறுவனமும் அளிக்காத அளவுக்கு அதிவேகமான இணையத்தை இதன் மூலம் பயன்படுத்த முடியும். பைபர் சேவையை பயன்படுத்துவதற்கு கேபிள்கள் தேவையாக இருக்கும்.
ஆனால் ஜியோ நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த கேபிளின் உதவி இல்லாமல் காற்றிலேயே அல்ட்ரா ஸ்பீட் இணைய சேவையை வழங்கவுள்ளது. வரும் செப்டம்பர் 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று நடைமுறைக்கு வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement