'திமுக தலைவராக 5 ஆண்டுகள்' – ஸ்டாலின் உணர்ச்சிகர கடிதம் – இயக்குநராகும் விஜய் மகன் – கலங்கிய வடிவேலு

“திமுக தலைவராக 5 ஆண்டுகள்…” – ஸ்டாலின் உணர்ச்சிகர கடிதம்!

முதல்வர் ஸ்டாலின்

டந்த 2018 -ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமானதைத் தொடர்ந்து திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், இன்றுடன் (ஆகஸ்ட் 28) அவர் அந்த பதவிக்கு வந்து ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்படுத்தி உள்ள ‘இந்தியா’ ( I.N.D.I.A) கூட்டணியிலும் ஸ்டாலினின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதனிடையே நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டும், திமுக தலைவராக பதவிக்கு வந்து ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டியும் அவர் தனது கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில், ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட’ விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை விவரித்துள்ள அவர், ” ‘இந்தியா’ என்ற பெயரைக் கேட்டாலே பாஜக அரசு அலறக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது” என அக்கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.

அவரது கடிதத்தை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

சீமானை கைது செய்ய நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகார்! 

நடிகை விஜயலட்சுமி, சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பின்னர் திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியதாக 2011-ல் போலீஸில் புகாரளித்திருந்தார் நடிகை விஜயலட்சுமி.

அதன் பிறகு, சீமான் தரப்பிலிருந்து மிரட்டல்கள் வருவதாகக் கூறிவந்த விஜயலட்சுமி, ஒருகட்டத்தில் சீமானுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

5 மாநில தேர்தல்: ‘மோடி மேஜிக்’-ஐ கையில் எடுக்கும் பாஜக?!

பிரதமர் மோடி

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது.

இந்தத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வுக்கு அடுத்து நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, இந்தத் தேர்தலில் தீவிர கவனம் செலுத்த பா.ஜ.க தலைமை முடிவுசெய்திருக்கிறது.

இது தொடர்பாக உள்ளூர் தலைவர்களுக்கு பா.ஜ.க மேலிடம் பிறப்பித்துள்ள உத்தரவு உள்ளிட்ட தகவல்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

தாய்… தற்போது தம்பி… அடுத்தடுத்த இழப்புகளால் கலங்கிய வடிவேலு!

வடிவேலு

டிகர் வடிவேலுவின் உடன்பிறந்த தம்பியும் திடீரென மரணமடைந்ததால் மிகவும் சோகத்துக்கு ஆளாகியுள்ளார் பிரபல நடிகர் வடிவேலு.

தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை நடிப்பில் கடந்த 30 வருடங்களாக தனி இடத்தை பிடித்து அதை இன்றுவரை தக்க வைத்துள்ளவர் நடிகர் வடிவேலு, சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தில் மிகசிறப்பான கனமான வேடத்தில் நடித்து தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

அமெரிக்க அதிபர் தேர்தல்: பரபரப்பூட்டும் விவேக் ராமசாமி யார்?!

விவேக் ராமசாமி

மெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்காக ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உட்பட பலரும் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

ட்ரம்புடன் அவரது கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி உள்பட பலரும் களம் இறங்கி உள்ளனர். அவர்கள் குடியரசு கட்சியினரிடம் ஆதரவை திரட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யார் இந்த விவேக் ராமசாமி?! படிக்க இங்கே க்ளிக் செய்க…

பருப்பு முதல் பாயசம் வரை… பாரம்பர்ய ஓணம் சத்யாவில் அப்படி என்ன ஸ்பெஷல்?

ஓணம் சத்யா

கேரளத்தில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதன் வண்ணமயமான மற்றும் சுவையான பல்வேறு சடங்குகள் கேரள மாநிலத்தைத் தாண்டியும் உலக அளவில் பல்வேறு மக்களை ஈர்த்துள்ளது.

பல வண்ணப் பூக்கோலங்கள், அலங்கரிக்கப்பட்ட யானைகள் உள்ளிட்டவை இப்பண்டிகையின் சிறப்பு. இவை மட்டுமல்லாது மற்றொரு சிறப்பு, சத்யா எனப்படும் அறுசுவை விருந்து.

இது குறித்த சுவாரஸ்யமான தகவல்களுடன் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

சச்சினின் வரலாற்று சதம்… ஆசியக்கோப்பையின் நாஸ்டாலஜி மொமன்ட்ஸ்!

சச்சின், கங்குலி

ரு இன்னிங்ஸ் வெல்லும், ஒரு இன்னிங்ஸ் கொல்லும் ஒருசில இன்னிங்ஸ்கள் மட்டுமே காலத்தையே உறைய வைக்கும்.

துணைக்கண்ட வரைபடத்தில் கிரிக்கெட்டின் ஆதிக்க மையம் எந்த நாட்டில் நிலைகொண்டு இருக்கிறது என்பதை முடிவு செய்வதற்கான ஆசியக்கோப்பை தொடங்கவுள்ளது.

ஆசியக் கோப்பை வரலாற்றில் அனைவரது ப்ளே லிஸ்ட்களிலும் பொதுவானவைகளாக ரிபீட் மோடில் இடப்பட்டிருக்கும் சில நாஸ்டாலஜிக் இன்னிங்ஸ்கள் இதோ…

படிக்க இங்கே க்ளிக் செய்க…

வீட்டு மேம்பாட்டுக் கடன் வாங்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

வீட்டு மேம்பாட்டுக் கடன்

வீட்டைப் புதுப்பித்தல் அல்லது விரிவுபடுத்தலில் பழுது நீக்கம், பூச்சு, தரை அமைத்தல், மேல்தளம் அமைத்தல் உள்ளிட்ட சீரமைப்பு மாற்றங்கள் எனப் பல்வேறு அம்சங்கள் அடங்கியுள்ளன.

இந்த வேலைகளை மேற்கொள்ள நம்மிடம் போதிய பணவசதி இல்லாத பட்சத்தில் வங்கி, வீட்டுவசதி நிறுவனம் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து வீட்டு மேம்பாட்டுக் கடனைப் (Home Improvement Loan) பெற்றுக்கொள்ளலாம்.

அந்த கடனை வாங்க நீங்கள் என்ன செய்ய வேண்டும், தேவையான தகுதிகள் என்னென்ன என்பதை

தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்க…

Vijay:லண்டனில் படிப்பு; இயக்குநராகும் விஜய்யின் மகன்!

விஜய் மகன் ஜேசன் விஜய்

லைகா தயாரிப்பில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் விஜய் இயக்குநராக களமிறங்குகிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பு, விநியோகம் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் பன்முகப்படுத்தப்பட்ட சாதனைகள், அவற்றின் தனித்துவமான உள்ளடக்கம் மற்றும் பெரிய பட்ஜெட் நட்சத்திரத் திட்டங்களுடன், ஏராளமான பொழுதுபோக்குகளுடன் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

இது குறித்த விரிவான தகவல்களை படிக்க இங்கே க்ளிக் செய்க…

—————–

‘மகாநதி’: “கோடிகளுடன் அவர் (கமல்) விளையாடும் ஆபத்தான விளையாட்டு”- வசந்தபாலன் நெகிழ்ச்சி

படிக்க இங்கே க்ளிக் செய்க…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.