ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை முன்னேற்றும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித் திட்டத் தொடரில் இரண்டாவது பயிற்சிப் பட்டறை மெனேரிபிடியவில் அமைந்துள்ள கல்வி, பயிற்சி, ஆய்வு மற்றும் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் சப்ரகமுவ ஆளுநர் நவீன் திசாநாயகவின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாணப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆங்கில ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பபத்தை சபரகமுவ மாகாணத்தில் முன்னேற்றுவதற்காக 700 ஆங்கில ஆசிரியர்களுக்காக பிரிடிஷ் கௌன்சில் நிறுவனத்தின் ஊடாக ஆங்கிலப் பயிற்சி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே பிரான்டிக்ஸ் நிறுவனத்தின் ஊடாக மாகாணத்தின் பாடசாலை மாணவர்களுக்காக கல்வியைத் தொடர்வதற்காக 350 இலட்சம் ரூபா பெறுமதியான 246 டிஜிடல் பலகைகள் வழங்கப்பட்டது. இதனைப் பயன்படுத்துவதற்கான ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை முறையாக பாடசாலை மாணவர்களுக்காக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், தற்போது சப்ரகமுவ மாகாணத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அமாலி வீரசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.