கல்யாணம் முடிந்த கையோடு புது மாப்பிள்ளை கவின் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு.!

சின்னத்திரையில் இருந்து பலர் வெள்ளித்திரைக்குள் நுழைந்தாலும், ஒருசிலர் மட்டுமே வெற்றி கொடி நாட்டுகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து சினிமாவில் நுழைந்து தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர் கவின். இந்நிலையில் ‘டாடா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் நடிக்கவுள்ள புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். சீரியல் மூலமாக ரசிகர்களை கவர்ந்த அவர், கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். அந்த நிகழ்ச்சி கவினுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை கொடுத்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பிக்பாஸ் டைட்டில் வெல்லுவார் என எதிர்பார்க்கப்பட்ட கவின் திடீரென பிக்பாஸ் வீட்டிலிருந்து பணப்பெட்டியை எடுத்து கொண்டு வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் கவின் ‘டாடா’ என்ற பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்த படத்தில் நடித்தார். அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் வெளியாகி இருந்தது இந்தப்படம்.

கவின், அபர்ணா தாஸ், பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி பீல் குட் மூவியாக ஹிட்டடித்தது ‘டாடா’ படம். ரூபாய் 100 கோடி கிளப்பிலும் இணைந்து சாதனை படைத்தது ‘டாடா’.

Kavin: பிக்பாஸ் கவினுக்கு ‘டும் டும் டும்’: மணப்பெண் யார் தெரியுமா.?

இந்நிலையில் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததை தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி மோனிகா என்ற தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார். இந்த திருமணத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன், நெல்சன் திலீப்குமார் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலகை சார்ந்த பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். கவினின் திருமணம் தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகின.

இந்நிலையில் திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் முதலில் ஹரிஸ் கல்யாண் நடிக்க இருந்தார். ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இளன், கவின் இணையவிருந்தனர். ஆனால் இந்தப்படத்தில் தற்போது கவின் நடிக்கவுள்ளார். ‘ஸ்டார்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வரும் 31 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கஷ்டகாலங்களில் நெல்சன் செய்த உதவிகள்..நெகிழ்ச்சியாக பேசிய கவின்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.