ஜெயிலர் பற்றி அந்த வார்த்தை சொன்ன விஜய்: அந்த மனுஷனுக்கு பெரிய மனசுய்யா

Vijay: ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் குறித்து விஜய் சொன்னது போன்றே நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

​சூப்பர் ஸ்டார்​அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற பேச்சு அவ்வப்போது எழுவதும், அடங்குவதுமாக உள்ளது. இந்நிலையில் விஜய் தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசத் துவங்கினார்கள். ரஜினிகாந்தை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்றார்கள். இதனால் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் மோதல் ஏற்பட்டது.யோகி​ரஜினிக்கு யோகி ஆதித்யநாத் தான் Role Model – இயக்குனர் பிரவீன் காந்தி​​ஜெயிலர்​வெறும் 18 நாளில் ரூ. 600 கோடி வசூலித்த ஜெயிலர்நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் உலக அளவில் ரூ. 600 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் ஜெயிலர் ஆகும். இதை பார்த்த ரஜினி ரசிகர்களோ இப்போ தெரியுதா யார் சூப்பர் ஸ்டார் என்று என தெரிவித்துள்ளனர்.

​விஜய்​ஜெயிலர் படம் பற்றி விஜய் கூறிய விஷயத்தை நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார். விஜய்யை வைத்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தை பார்த்து பலரும் மோசமாக விமர்சித்தார்கள். சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனம் தான் அதிகம் இருந்தது. அதை பார்த்த விஜய்யோ, அது அப்படித்தான் இருக்கும், சரி ஆகிவிடும் என்று நெல்சனுக்கு அவ்வப்போது போன் செய்து ஆறுதல் கூறி வந்திருக்கிறார். மேலும் நீ வேணும்னா ஜெயிலர்ல பாரு…கண்டிப்பா அடிச்சிரும் என நெல்சனிடம் கூறியிருக்கிறார் விஜய்.

​லைகா தயாரிப்பில் இயக்குநராகும் விஜய் மகன்

​உண்மை​சீமான் என் வாழ்க்கையை சீரழித்துவிட்டார்: போலீஸ் கமிஷனரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்ஜெயிலர் படம் கண்டிப்பாக ஹிட்டாகும் என விஜய் கூறியது போன்றே நடந்துவிட்டது. மேலும் வசூலில் பல புதிய சாதனைகள் படைத்து வருகிறது ஜெயிலர். நெல்சனிடம் விஜய் கூறியது குறித்து அறிந்தவர்களோ, அந்த மனுஷன் தலைவர் ரசிகராச்சே அதனால் நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார். அவருக்கு பெரிய மனசுய்யா என்கிறார்கள். ஜெயிலர் படத்திற்கு பிறகு நெல்சன் திலீப்குமாரின் மார்க்கெட் உச்சம் தொட்டுவிட்டது. பீஸ்ட் படத்திற்காக நெல்சன் திலீப்குமாரை கண்டபடி விளாசியவர்கள் கூட அவரை தற்போது பாராட்டி வருகிறார்கள்.

​லியோ​லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் ஜெயிலர் அளவுக்கு வசூல் செய்யுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பத் துவங்கிவிட்டார்கள். உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து விக்ரம் எனும் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார் லோகேஷ். அதே போன்று லியோவும் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

​லோகேஷ்​லியோ படம் குறித்து ரசிகர்களுக்கு ஒரேயொரு கேள்வி தான் இருக்கிறது. ஏகப்பட்ட வில்லன்கள், மேலும் ஒரு ஊரே லியோ படத்தில் நடித்திருக்கிறது. அப்படி என்ன கதையை தான் படமாக்கியிருக்கிறீர்கள் லோகேஷ் என்பதே ரசிகர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி ஆகும். படத்தை ரிலீஸ் செய்யும் வரை புதிதாக நடிகர்களை சேர்த்துக் கொண்டே இருப்பார் போன்று என்கிறார்கள் ரசிகர்கள்.

​வில்லன்​லியோவில் ஹரால்டு தாஸாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் கெத்து காட்டியிருப்பதை பார்த்து ரசிகர்கள் லைட்டாக மிரண்டுவிட்டார்கள். அய்யய்யோ விஜய் சேதுபதி போய் அர்ஜுனா, என்ன லோகி இதெல்லாம் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வில்லன் விஜய் சேதுபதி ஸ்கோர் செய்ததை யாரும் இன்னும் மறக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.