வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடி சீனா புதிய வரைபடம் வெளியிட்டிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியா – சீனா எல்லைப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சூழலில், லடாக்கில் குறிப்பிட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்தது. மேலும், அருணாச்சலப்பிரதேசத்தில் இந்தியா – சீனா எல்லைப்பகுதியின் கிழக்குப் பகுதியிலுள்ள பல சதுர கி.மீ பகுதியை சொந்தம் கொண்டாடி வருகிறது.
இதற்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. தற்போது சீனா புதிய வரைபடம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/gallerye_10480018_3416970.jpg)
அதில் வழக்கம் போல ஆக்கிரமித்த இந்தியப் பகுதிகளை ‘அக்ஷ்யா சின்’ என குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன் அருணாச்சல பிரதேச மாநிலத்தை, தெற்கு திபெத் எனவும் இடம்பெறச் செய்திருக்கிறது.
இந்திய நிலப் பகுதிகளை மட்டுமல்ல பல்வேறு நாடுகளின் எல்லைப் பகுதிகளையும் கூட சீனா தம்முடைய நாட்டின் பகுதிகளாக இந்த வரைபடத்தில் உரிமை கோரி இருக்கிறது.
தைவானையும் தம்முடைய நிலப் பகுதியாக சொல்லிக் கொள்கிறது சீனா. தென் சீனா கடலின் பெரும் பகுதியையும் இந்த வரைபடம் மூலமாக தனது நிலம் என்கிறது சீனா. சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா சார்பில் கண்டனம் வலுத்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement