சமந்தாவின் குஷி ட்ரெய்லர் வந்ததால் தியேட்டரில் இருந்து பாதியிலேயே கிளம்பினேனா?: நாக சைதன்யா

சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றது அனைவருக்கும் தெரியும். சமந்தாவை பிரிந்ததில் இருந்து அவரை பற்றி ஒரு வார்த்தை கூட தவறாக பேசாதவர் நாக சைதன்யா.

ரஜினிக்கு யோகி ஆதித்யநாத் தான் Role Model – இயக்குனர் பிரவீன் காந்தி
அவரின் இந்த குணம் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மேலும் சமந்தாவுடன் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்காமல் அப்படியே வைத்திருக்கிறார் நாக சைதன்யா.

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

மேலும் பேட்டிகளில் சமந்தாவை பற்றி கேள்வி கேட்டால் அவரை பாராட்டி பேசுகிறார். இந்நிலையில் படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற நாக சைதன்யா பாதியில் வெளியே வந்துவிட்டார். தியேட்டரில் சமந்தாவின் குஷி பட ட்ரெய்லர் வந்ததும் அதை பார்த்து கோபப்பட்டு கிளம்பிவிட்டார் சைதன்யா என தகவல் வெளியாகி தீயாக பரவியது.

இந்நிலையில் இது குறித்து நாக சைதன்யா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

அந்த தகவலில் உண்மையே இல்லை. சில தெலுங்கு இணையதளங்கள் தான் இந்த வதந்தியை கிளப்பிவிட்டது. அவர்களின் செய்தியை திருத்துமாறு நான் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறேன் என்றார்.

சமந்தா பட ட்ரெய்லரை பார்த்து தியேட்டரில் இருந்து வெளியே செல்லும் ஆள் இல்லை நாக சைதன்யா என அவரின் ரசிகர்கள் தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் நாக சைதன்யா அளித்த விளக்கத்தை பார்த்த ரசிகர்களோ, நாங்கள் தான் அப்பவே சொன்னோம்ல என்கிறார்கள்.

சிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் கணவன், மனைவியாக நடித்திருக்கும் குஷி படம் செப்டம்பர் 1ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்த படத்தை சமந்தா மட்டும் அல்ல விஜய் தேவரகொண்டாவும் பெரிதும் எதிர்பார்க்கிறார்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்

ட்ரெய்லரில் சமந்தா, விஜய் தேவரகொண்டா இடையோன கெமிஸ்ட்ரியை பார்த்து ரசிகர்கள் இம்பிரஸ் ஆகிவிட்டார்கள். மேலும் குஷி இசை நிகழ்ச்சியிலும் சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் கெமிஸ்ட்ரி தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மயோசிடிஸுக்கு சிகிச்சை பெற வசதியாக நடிப்பில் இருந்து ஆறு மாத காலம் பிரேக் எடுத்திருக்கிறார் சமந்தா. அவர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார்.

உன்னை மிஸ் பண்றேன்: நள்ளிரவில் சமந்தாவுக்கு வீடியோ கால் செய்த ‘குஷி’ விஜய் தேவரகொண்டா

இந்நிலையில் நள்ளிரவில் சமந்தாவுக்கு வீடியோ கால் செய்து உன்னை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்று கூறி குஷி படத்தில் வரும் பாடலை பாடி அசத்தினார் விஜய் தேவரகொண்டா. தான் சமந்தாவுடன் வீடியோ கால் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

குஷி படத்தை சமந்தா இல்லாமல் தனியாக விளம்பரம் செய்து வருகிறார் விஜய். இந்நிலையில் தான் அவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது.

ஜெயிலர் பற்றி அந்த வார்த்தை சொன்ன விஜய்: அந்த மனுஷனுக்கு பெரிய மனசுய்யா

தளபதி விஜய் நடிப்பில் வெளியான குஷி படம் போன்று விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் குஷி படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், குஷி காம்பினேஷன் எப்பொழுதுமே வெற்றி தான் என்கிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.