பூமியை விழுங்க காத்திருக்கும் பாம்பு.. கேரளா ஓணம் பண்டிகையில் நெஞ்சை கனக்க வைத்த காட்சி..

திருவனந்தபுரம்:
ஓணம் கொண்டாட்டத்தால் கேரளாவே வண்ணமயமாக ஜொலித்து வரும் நிலையில், நம் முகத்தில் அறைந்தாற் போல அங்கு தென்பட்ட காட்சி மனதை கனக்க செய்வதாக இருந்தது.

கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் களைக்கட்டி வருகிறது. எங்கு பார்த்தாலும் வண்ணப் பூக்களால் ஆன அத்தப்பூ கோலங்களும், மாவிலை மலர் தோரணங்களும் மனதை கொள்ளையடிக்கின்றன. குறிப்பாக, தலைநகர் திருவனந்தபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஓணத்தை ஒட்டி சுற்றுலாப் பயணிகளும் திருவனந்தபுரத்தில் குவிந்துள்ளனர்.

இந்த பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கும், உற்சாகத்துக்கும் நடுவே, அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஒரு பிரம்மாண்ட பொருள் நம் மனதில் இருந்து அகல மறுக்கிறது. 90 அடி நீளத்திலான பாம்பு ஒன்று நம் பூமியை விழுங்க தயாராவதை போல தத்ரூபமாக அது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அருகில் சென்று பார்த்த போது தான் அந்த பாம்பு முழுக்க முழுக்க பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அதுவும் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் தூக்கியெறிந்த பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் குப்பைகளால் அந்த 90 அடி பாம்பு செய்யப்பட்டுள்ளது.

மண்ணில் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் நம் பூமியை எப்படி அழித்து வருகிறது என்பதை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கின்றனர் திருவனந்தபுரம் ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரி மாணவர்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த பாம்பு 20 ஆயிரம் பிளாஸ்டிக் குப்பைகளால் செய்யப்பட்டிருக்கிறது. இந்த குப்பைகள் யாவும் வெறும் 15 நாட்களில் அங்கு சேகரிக்கப்பட்டவை ஆகும்.

இந்தியாவிற்கு வருகை தரும் சவுதி இளவரசர்.. அடுத்தக்கட்டத்திற்கு போகும் இந்தியா – சவுதி உறவு!

இயற்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கேரளாவில் அதிலும் ஒரே ஒரு இடத்தில் 20 ஆயிரம் பிளாஸ்டிக் குப்பைகள் சில நாட்களிலேயே சேருகிறது என்றால் ஒட்டுமொத்த இந்தியாவிலும், ஏன் இந்த உலகத்தில் எத்தனை பிளாஸ்டிக் குப்பைகள் இருக்கும் என யோசித்தாலே நம் நெஞ்சம் பதறுகிறது. நம் குழந்தைகள் அடங்கிய அடுத்த தலைமுறையை பேரழிவில் இருந்து காக்க இனியாவது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் மனதில் நிறுத்தி விடுகிறது அந்த பாம்பு சிலை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.