மல்வத்து, அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களிடம் ஜனாதிபதி ஆசி பெற்றார்

மல்வத்து, அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களிடம் ஜனாதிபதி ஆசி பெற்றார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க   (29) பிற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகா நாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

முதலில் மல்வத்து மகாவிகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி, மல்வத்து பீடத்தின் மகாநாயக்க வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். அதனையடுத்து
தேரர், பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மல்வத்து பீடத்தின் அனுநாயக்க வண. திம்புல்கும்புரே ஸ்ரீ விமலதம்ம தேரரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

அதன் பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க வண. வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரைச் சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

வரலாற்று சிறப்புமிக்க முதியங்கனை ரஜமகா விகாரையின் பொறுப்பாளர் கலாநிதி வண. முருந்தெனியே ஸ்ரீ தம்மரத்தன நாயக்க தேரரும் மேற்படி சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தார்.

அதனையடுத்து ஜனாதிபதி, அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர்களான, வண. ஆணமடுவே தம்மதிஸ்ஸி தேரர் மற்றும் வண. வெடருவே உபாலி தேரர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கமல் புஷ்பகுமார ஆகியோரும் இச் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

PMD

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.