சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் தரையிறங்கி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் பல்வேறு முக்கிய வேதியல் கூறுகளை நிலவில் கண்டுபிடித்துள்ளது. இந்த சாதனையின் மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து பல்வேறு வேதியல் மூலக்கூறுகளின் இருப்பை கண்டுபிடித்துள்ள முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது இந்தியா.
சூரியன் மூலம் எனர்ஜி பெரும் ரோவர்
சந்திராயன் – 3 விண்கலத்தில் சென்ற ரோவர் தந்து லேண்டர் உதவியுடன் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சில நாட்களாக தன்னுடைய ஆய்வை செய்து வருகிறது. அதன்படி, நிலவில் சூரிய வெளிச்சத்தின் உதவி வழியாக எனெர்ஜியை பெற்றுக் கொண்டு செயல்பட்டு வரும் ரோவர் அதன் அதிநவீன டெக் தொழில்நுட்பங்களின் உதவியோடு நிலவின் அடிப்பகுதியை ஆராய்ந்து வருகிறது.
நிலவில் வேதியல் மூலக்கூறுகள்
அதன் மூலம் தான் தற்போது நிலவில் பல்வேறு வேதியல் கூறுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளது சந்திரயான் – 3. தற்போது வரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, நிலவில் அலுமினியம் (Al), சல்பர் (S), கால்சியம் (Ca), அயர்ன் (Fe), குரோமியம் (Cr), டைட்டானியம் (Ti), மாங்கனீஸ் (Mn), சிலிக்கான் (Si), மற்றும் ஆக்சிஜன் (O) ஆகிய வேதியல் மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நிலவில் தண்ணீர் இருக்கா?
நிலவில் தண்ணீர் குறித்த ஆய்வுதான் உலக நாடுகளின் பெரும் கனவாக இருந்து வரும் நிலையில் தற்போதைய கண்டுபிடிப்புகள் பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது. இந்நிலையில் ரோவரும் தொடர்ந்து நிலவில் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் தென்படுகிறதா என்ற ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.
நிலவின் வெப்பநிலை
தற்போது வரை நிலவின் மண்ணை ஆராய்ந்து பிரக்யான் ரோவர் அனுப்பியுள்ள தகவல்களும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதன் வெப்பநிலை மைனஸ் 10 டிகிரி செல்ஸியஸ் முதல் 70 டிகிரி செல்சியஸ் வரை இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த 10 டிகிரி செல்சியஸ் சந்திர மேற்பரப்புக்கு 80mm அடியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே மேற்பரப்புக்கு மேல் தோராயமாக 20mm தொலைவில் 60 டிகிரி செல்சியஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.