அமெரிக்கா ஏர்போர்ட்டில் விஜய்.. எல்லாம் 'தளபதி 68' படத்துக்காக: தீயாய் பரவும் புகைப்படம்.!

‘லியோ’ படத்தின் ரிலீசுக்கே இன்னமும் ஒரு மாதம் உள்ள நிலையில் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 68’ க்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘லியோ’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டதால் ‘தளபதி 68’ பட வேலைகளும் துவங்கி விட்டது. இந்நிலையில் நடிகர் விஜய் ஏர்போட்டில் இருப்பதை போன்று வெளியாகியுள்ள லேட்டஸ்ட் போட்டோ சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது.

‘லியோ’ படத்தின் ரிலீஸ் வரை ‘தளபதி 68’ குறித்த எந்த அப்டேட்டையும் வெளியிட கூடாது என்பதில் கவனமாக உள்ளனர் படக்குழுவினர். வெங்கட் பிரபுவிடம் கேட்ட போதும் இதையே தான் சொன்னார். முதலில் ‘லியோ’ ரிலீஸ். அதுக்கப்புறம் தான் எந்த அப்டேட்டாக இருந்தாலும் என்பதில் அவரும் உறுதியாக உள்ளார். ஆனாலும் ‘தளபதி 68’ படம் குறித்த தகவல்கள் தொடர்ச்சியாக சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘லியோ’ படத்தை தொடர்ந்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடீரென வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட் ஆனார் விஜய். இந்த காம்போ எப்படி இணைந்தது என்பது தான் கோலிவுட் வட்டாரத்தில் ஒரே பேச்சாக உள்ளது. ஏகேவை வைத்து ‘மங்காத்தா’ என்ற சம்பவத்தை செய்தததை போன்று தளபதியை வைத்தும் ஒரு தரமான சம்பவத்தை கொடுங்கள் என்பது தான் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இதனிடையில் ‘தளபதி 68’ படத்தின் கதை குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. அதன்படி விஜய் இந்தப்படத்தில் அப்பா, மகனாக இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் அப்பா கேர்கடருக்கு ஜோதிகாவும், மகன் கதாபாத்திரத்திக்கு பிரியங்கா அருள் மோகனும் ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

Thalapathy 68: ‘தளபதி 68’ படத்திற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த ஏகே: எம்புட்டு பாசம்.!

அத்துடன் ‘தளபதி 68’ படத்தில் ஜெய், மாதவன், பிரபுதேவா உள்ளிட்டோர் இணைந்து நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ரசிகர்கள் மத்தியில் தற்போது மல்டிஸ்டார் படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் விஜய், வெங்கட் பிரபு இணையும் படமும் அதே பாணியில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நடிகர் விஜய் ஏர்போட்டில் இருப்பதை போன்ற புகைப்படம் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதன்படி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையில் விஜய் இருப்பதை போன்று புகைப்படம் வெளியாகியுள்ளது. ‘தளபதி 68’ பட லுக் டெஸ்ட்டிற்காக அவர் அமெரிக்கா பறந்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் இந்த லேட்டஸ்ட் போட்டோவை சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

‘தளபதி 68’ பட கதை முதல் ஹீரோயின் வரை: வெளியான அசத்தலான அப்டேட்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.