காதல் அறிவிப்பு செய்யப் போகிறாரா விஜய் தேவரகொண்டா?
தெலுங்குத் திரையுலகத்தின் 'இளம் பேச்சுலர்' நடிகர் விஜய் தேவரகொண்டா. 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் வெற்றிக்குப் பிறகு இளம் பெண்கள் அதிகம் விரும்பும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
அவருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் காதல் என கடந்த சில வருடங்களாகவே கிசுகிசு இருந்து வந்தது. இருவரும் அதை இதுவரை மறுக்கவில்லை. இந்நிலையில் நேற்று அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “நிறைய நடக்கின்றது, ஆனால், இது உண்மையிலேயே ஸ்பெஷலானது, விரைவில் அறிவிக்கிறேன்,” என ஒரு ஆணும், பெண்ணும் கை கோர்த்த நிலையில் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
தனது காதலைப் பற்றி விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார் என ரசிகர்கள் இது குறித்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால், அந்தக் காதலி ராஷ்மிகாவா அல்லது சமந்தாவா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். 'குஷி' படத்தில் நடித்த போது விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் நெருங்கிப் பழகியதாக டோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
இது காதல் அறிவிப்பாக இருக்குமா அல்லது ஏதாவது படத்திற்கான பில்டப்பா என்பது விரைவில் தெரிந்துவிடும்.