சென்னை: உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா முதலமைச்சரை மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, உலக செஸ் தொடரில் வென்ற பதக்கத்தை முதலமைச்சரிடம் காண்பித்து மகிழ்ச்சி அடைந்தார். முன்னதாக பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் தேநீர் விருந்து அளித்தார். அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்ற பிடே உலகக்கோப்பை செஸ் போட்டியில், இந்தியா சார்பில் பல வீரர்கள் […]