பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் ஆசிய கோப்பை 2023 இன்று தொடங்குகிறது. இந்த கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா தனது முதல் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக செப்டம்பர் 2 ஆம் தேதி சனிக்கிழமை விளையாடுகிறது. எந்த சேனல், சேனல் சப்ஸ்கிரிப்சன் விலை, போட்டி நேரங்கள் மற்றும் அட்டவணை விவரங்கள் உட்பட, ஆசிய கோப்பை 2023-ஐ இந்தியாவில் டிவியில் எப்படிப் பார்க்கலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
ஆசிய கோப்பை 2023 இன்றைய போட்டி: இடம், இந்திய நேரம்
பாகிஸ்தான் vs நேபாளம்
நேரம்: பிற்பகல் 03:00 (IST)
இடம்: முல்தான் கிரிக்கெட் ஸ்டேடியம், பாகிஸ்தான்
2023 ஆசிய கோப்பையை டிவியில் நேரடியாக பார்ப்பது எப்படி?
ஆசிய கோப்பை 2023 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கின் பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பப்படும்.
இந்தியா சார்ந்த போட்டிகள் மற்றும் ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டியை டிடி ஸ்போர்ட்ஸில் இலவசமாக தூர்தர்ஷன் ஒளிபரப்பும். எனவே, போட்டிகளைக் காண நீங்கள் DD இலவச டிஷ் DTH சேவையை அணுக வேண்டும்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் விலை
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1: ரூ 22.42
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD: ரூ 22.42
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி: ரூ 22.42
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி எச்டி: ரூ 22.42
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1: ரூ 22.42
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1 HD: ரூ 22.42
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2: ரூ 22.42
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 HD: ரூ 22.42
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்: ரூ 22.42
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு: ரூ 22.42
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம்: ரூ 22.42
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் பெயர் மற்றும் எண்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1: 455 (டாடா ஸ்கை)/ 277 (ஏர்டெல் டிஜிட்டல் டிவி)/ 603 (டிஷ் டிவி)/ 649 (வீடியோகான் டி2எச்)/ 500 (சன் டைரக்ட்)
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD: 454 (டாடா ஸ்கை)
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி: 460 (டாடா ஸ்கை)
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி எச்டி: 459 (டாடா ஸ்கை)
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1: 464 (டாடா ஸ்கை)/ 283 (ஏர்டெல் டிஜிட்டல் டிவி)/ 646 (டிஷ் டிவி)/ 661 (வீடியோகான் டி2எச்)/ 508 (சன் டைரக்ட்)
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1 எச்டி: 463 (டாடா ஸ்கை)/ 300 (ஏர்டெல் டிஜிட்டல் டிவி)/ 645 (டிஷ் டிவி)/ 660 (வீடியோகான் டி2எச்)/ 987 (சன் டைரக்ட்)
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2: 457 (டாடா ஸ்கை)/ 279 (ஏர்டெல் டிஜிட்டல் டிவி)/ 605 (டிஷ் டிவி)/ 651 (வீடியோகான் D2H)/ 501 (சன் டைரக்ட்)
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 HD: 456 (டாடா ஸ்கை)/ 280 (ஏர்டெல் டிஜிட்டல் டிவி)/ 604 (டிஷ் டிவி)/ 650 (வீடியோகான் D2H)/ 986 (சன் டைரக்ட்)
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ்: 1551 (டாடா ஸ்கை)
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு: 1446 (டாடா ஸ்கை)/ 928 (ஏர்டெல்)/ 2433 (டிஷ் டிவி)/ 2433 (வீடியோகான் D2H)/ 515 (சன் டைரக்ட்)
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம்: 1645 (டாடா ஸ்கை)
ஆசிய கோப்பை 2023 ஒளிபரப்பு மொழிகள்
ஆசிய கோப்பை 2023 இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பப்படும்.
ஆசிய கோப்பை 2023 அட்டவணை:
பாகிஸ்தான் vs நேபாளம்: ஆகஸ்ட் 30 ஆம் தேதி மாலை 3:00 மணிக்கு IST
பங்களாதேஷ் vs இலங்கை: ஆகஸ்ட் 31 ஆம் தேதி மாலை 3:00 மணிக்கு IST
பாகிஸ்தான் vs இந்தியா: செப்டம்பர் 2 ஆம் தேதி மாலை 3:00 மணிக்கு IST
பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான்: செப்டம்பர் 3 ஆம் தேதி மாலை 3:00 மணிக்கு IST
இந்தியா vs நேபாளம்: செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை 3:00 மணிக்கு IST
ஆப்கானிஸ்தான் vs இலங்கை: செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 3:00 மணிக்கு IST
சூப்பர் 4 போட்டிகள் செப்டம்பர் 6, செப்டம்பர் 9, செப்டம்பர் 10, செப்டம்பர் 12, செப்டம்பர் 14 மற்றும் செப்டம்பர் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும். இறுதியாக, ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டி செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறும்.
ஆசிய கோப்பை 2023 போட்டிகளை எங்கே இலவசமாகப் பார்க்கலாம்?
டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைலில் ஆசிய கோப்பை 2023ஐ இலவசமாகப் பார்க்கலாம். நீங்கள் டிடி இலவச டிஷ் பயன்படுத்துபவராக இருந்தால், இந்தியா சார்ந்த மற்றும் இறுதிப் போட்டியை இலவசமாகப் பார்க்கலாம்.
2023 ஆசிய கோப்பையின்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி எப்போது?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆசிய கோப்பை 2023 போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி மாலை 3:00 மணிக்கு இந்திய நேரப்படி நடைபெறும். இலங்கையின் பல்லேகலையில் உள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.