பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. பீகார் தலைநகர் பாட்னா, கர்நாடகா தலைநகர் பெங்களூரு ஆகியவற்றில் இந்திய கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் மூன்றாவது முறையாக மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் ஆகஸ்ட் 31ஆம் தேதியும் செப்டம்பர் 1ஆம் தேதியும் கூட்டம் நடைபெறுகிறது.
சுமார் 26 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில் இதன் பிரதமர் வேட்பாளர் குறித்து இன்னும் கூடி விவாதிக்கவில்லை. மோடிக்கு எதிராக வலுவான ஒருவரை நிறுத்தினால் மட்டுமே வாக்காளர்களை ஈர்க்க முடியும். தேர்தலுக்குப் பின்னர் கட்சிகள் கூடி பிரதமரை தேர்ந்தெடுக்கலாம் என்று நினைத்தால் அது பாஜகவுக்கு சாதகமாக அமையும்.
சசிகலா ரிட்டர்ன்ஸ் – ஓபிஎஸ், டிடிவி அப்செட்? எடப்பாடி அடிக்கும் சூப்பர் சிக்ஸர்!
மோடியின் பிரபலத்துக்காக பாஜகவுக்கு வாக்களிப்பவர்கள் கணிசமான அளவில் உள்ளனர். எனவே பிரதமர் வேட்பாளரை இந்தியா கூட்டணி விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதீஷ் குமார், மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே என பலரது பெயர்கள் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் அடிபட ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரை முன்மொழிந்துள்ளார்.
ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா காகர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “நீங்கள் என்னை கேட்டால் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்வேன். இலவச தண்ணீர், இலவச கல்வி, இலவச மின்சாரம், மூத்தவர்களுக்கு இலவச யாத்திரை என்று பல திட்டங்களை முன்னெடுத்து சவால் மிக்கவாரக உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை நான் பிரதமர் வேட்பாளராக சொல்வேன்” என்று கூறினார்.
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது மக்கள் மத்தியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எவ்வளவு உறுதியோ அதேபோல் அவ்வாறு அறிவித்தால், கூட்டணிக் கட்சிகள் மத்தியில் அதிருப்தி எழும் என்பதும் உறுதி. ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் கட்சியினர் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு யாரை பிரதமர் வேட்பாளராக தெரிவிக்கிறார்களோ அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.