கொல்கத்தா,
132-வது தூரந்த் கோப்பை கால்பந்து தொடர் மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த அரையிறுதி போட்டியில் ஈஸ்ட் பெங்கால் மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடியதால் போட்டி விறுவிறுப்பாக நடந்தது. முதல் பாதியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்சி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடந்த 2-வது பாதி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி 2 கோல்கள் அடித்தது. ஆனால் யுனைடெட் எப்சி 1 கோல் மட்டுமே அடித்தது. இதனால் போட்டி வழக்கமான ஆட்ட நேர முடிவில் 2-2 என சமனில் முடிவடைந்தது.
இதனால் வெற்றி யாருக்கு என்பதை தீர்மாணிக்க பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கபட்டது. இதில் ஈஸ்ட் பெங்கால் 5-3 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்சி அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.