புற்றுநோய் சிகிச்சைக்கு ஊசி ரெடி… 7 நிமிடத்தில் ட்ரீட்மெண்ட்… புதிய வரலாறு படைக்கும் இங்கிலாந்து!

புற்றுநோய் என்ற பெயரை கேட்டதும் அச்சப்படாத நபர்களே இருக்க முடியாது எனச் சொல்லலாம். அந்த அளவிற்கு உடல் ரீதியாக, மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி விடும். இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அதன்பிறகு குணமடையவே முடியாது என்ற நிலை காணப்படுகிறது. இதற்கான மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இரைப்பை நோய்கள் என்னென்ன… இரைப்பை புற்றுநோய் எப்படி வராமல் தடுப்பது எப்படி

இங்கிலாந்தில் புதிய சாதனை

இந்நிலையில் உலகிலேயே முதல்முறையாக இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவை (NHS) எனப்படும் பொது சுகாதார அமைப்பு புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய ஊசியை கண்டறிந்துள்ளது. இந்த ஊசியை போட்டால் 7 நிமிடங்களில் வேலை செய்ய ஆரம்பித்து விடும் எனக் கூறுகின்றனர்.

குவைத் நாட்டில் வசிப்பவரா? அப்ப ‘Sahel App’ கட்டாயம் உங்க மொபைலில் இருக்கணும்… ஏன் தெரியுமா?

புற்றுநோய் சிகிச்சைக்கு ஊசி

இந்த ஊசியை அங்கீகரிக்க வேண்டும் என்று MHRA எனப்படும் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் NHS விண்ணப்பித்துள்ளது. அவர்கள் ஒப்புதல் அளித்துவிட்டால் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும். இங்கிலாந்து நாட்டில் நூற்றுக்கணக்கான புற்றுநோய் நோயாளிகளுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளிக்க உள்ளனர்.

Go
ogle News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.

நேரம் மூன்றில் ஒருபங்கு குறையும்

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஊசியால் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் காலம் மூன்றில் ஒரு பங்காக குறையும் எனக் கூறுகின்றனர். தற்போது புற்றுநோய் சிகிச்சைக்கு அடிஸோலிசூமாப் (Atezolizumab) என்ற மருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனை குளுக்கோஸ் ஏற்றுவது போல் டிரிப் போட்டு மருந்தை உட்செலுத்தி வருகின்றனர்.

அப்படியே அப்பாவை உரித்து வைத்திருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள்!

7 நிமிடங்கள் போதும்

இது வேலை செய்ய 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகும். இந்நிலையில் தான் ஊசி மூலம் செலுத்தி விரைவாக வேலை செய்ய வைக்க திட்டமிட்டுள்ளனர். வெறும் 7 நிமிடங்கள் போதும். மேற்குறிப்பிட்ட மருந்து நுரையீரல், மார்பு, கல்லீரல், சிறுநீர்ப்பை என பல்வேறு விதமான புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கீமோதெரபி சிகிச்சை

இங்கிலாந்தை பொறுத்தவரை ஆண்டுதோறும் 3,600 பேர் அடிஸோலிசூமாப் மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது புற்றுநோய் ஊசி கண்டுபிடிக்கப்பட்டதால் இன்னும் பல பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். அதுமட்டுமின்றி கீமோதெரபி சிகிச்சைக்கு கூடுதல் நேரம் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை பல்வேறு உலக நாடுகளும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.