பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு கிரகலட்சுமி திட்டத்தின் மூலமாக மாதம் ரூ. 2000 உரிமைத்தொகை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது .பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தொடங்கி வைத்தார்.
மைசூரில் நடைபெற்ற இத்திட்ட தொடக்க விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா , துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பங்கேற்றுள்ளனர் .
இந்த திட்டத்தின் கீழ் 1.20 கோடி பெண்கள் பயனடைய உள்ளனர். இத்திட்டத்திற்க்காக கர்நாடகா மாநில அரசு ரூ.17,500 கோடி நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.