Jawan Audio Launch: " `மரண மாஸ்' அட்லி; என் பையன் அனிருத்; அப்புறம் விஜய்… " – ஷாருக் கான்

பதான் படத்தின் வெற்றிக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஜவான்’. அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையோட்டி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் மாஸ் என்ட்ரியுடன் அரங்கில் நுழைந்த ஷாருக் கான், அனிருத், விஜய் சேதுபதி, யோகி பாபுவை பாராட்டி முத்தமிட்டார். அதுமட்டுமின்றி அனிருத்துடன் சேர்ந்து உற்சாகத்துடன் மேடையில் ஆடி அரங்கை அதிரவைத்தார் ஷாருக்.

ஜவான்: ஷாருக் கான்

இதையடுத்து மேடையில் பேசிய ஷாருக்கான், “நான் என் வாழ்க்கையில் ஒரு படத்திற்கான நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் நடத்தியது இல்லை. ‘Finest movies are come from tamilnadu’. ‘ஹே ராம்’ திரைப்படத்தில் நானாக தமிழ் பேசியிருந்தேன். விஜய் சேதுபதி என்னைப் பழி வாங்கலாம். என் பெண் ரசிகர்களை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியாது. எங்களுடைய பெரிய புரொடெக்சன் ‘மீர்’ தான் (atlee baby ). அனிருத் என் மகனை போன்றவன்.’why this kolaveri ‘ பாடலிலிருந்து அனிருத்தை பிடிக்கும்.” என்றார்.

நான் தமிழ்ல அட்லீயை ‘மரண மாஸ்’ என்றுதான் வாழ்த்த முடியும். `கம்பீரமான’ முத்துராஜ், `விறுவிறுப்பான’ ரூபன், `அட்டகாசமான’ விஜய் சேதுபதி, அனிருத் ‘என் பையன் ‘… என பலருக்கும் புனைப்பெயர் வைத்துப் பேசினார் ஷாருக்

” நான் விஜய், ரஜினி மாதிரியோ, அட்லி மாதிரியோ நடனமாட மாட்டேன். ஷோபி மாஸ்டர் என்னை நடனமாட வைத்திருக்கிறார். ‘ஆட்டம் போடு’ ஷோபி மாஸ்டர்…’கலகலப்பான’ யோகி பாபு…’வசீகரமான’ நயன்தாரா… ப்ரியா மணி ‘ சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திலிருந்து நடனமாடா சொல்லித்தருகிறார்… May be Tamil audience make us own… இங்குவுள்ள உணவு சுவையாகவும்,காரமாகவும் இருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.