அந்த கேள்வி.. ஒரு மாதிரியாக இருக்கும்: நடிகை ஓவியா ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கலக்கியவர் ஓவியா. சற்குணம் இயக்கத்தில் வெளியான ‘களவாணி’ படத்தில் விமல் ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இவருக்கு சரியான பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

நடிகை ஓவியாவிற்கு சினிமாவை பிக்பாஸ் நிகழ்ச்சி தான் மிகப்பெரிய ரீச்சை கொடுத்தது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக களமிறங்கினார் ஓவியா. தனது துறுதுறுப்பான செய்கைகளால் பிக்பாஸ் வீட்டில் பார்வையாளர்ளை கவர்ந்த ஓவியா, தனக்கு எதிராக வந்தவர்களை எல்லாம் இறங்கி அடித்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனாலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச்சை பெற்றார். ஒருக்கட்டத்தில் பிக்பாஸ் வீடே இவருக்கு எதிராக மாறினாலும், அதையெல்லாம் அசால்ட்டாக டீல் செய்தார் ஓவியா. இவருக்கு என ஆர்மி எல்லாம் தொடங்கி ரசிகர்களும் ஒரு வழி பண்ணினார்கள். முதல் சீசனின் டைட்டில் வின்னராக கப் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஓவியா, திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு பாதியிலே வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் கலக்குவார் என எதிர்பார்த்தால், பட வாய்ப்புகள் எதுவும் அவருக்கு சரியாக அமையவில்லை. காஞ்சனா 3, 90 ML போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார். இந்த படங்கள் பெரியளவில் அவருக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் குறித்த கேள்விக்கு, கடைசி வரை நடித்து கொண்டிருந்தால் மட்டுமே போதும், திருமணம் எல்லாம் செய்து கொள்ள மாட்டேன் என தெரிவித்திருந்தார் ஓவியா.

‘விக்ரம்’ பட வசூலை முந்திய ‘ஜெயிலர்’: இன்னும் அந்த சாதனை மட்டும் தான் பாக்கி.!

இதனையடுத்து ஓவியா ஏன் இப்படி சொல்கிறார்? அவர் தனபாலின ஈர்ப்பாளரா என்றெல்லாம் நெட்டிசன்கள் கேள்விகளை அடுக்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஒவியாவிடம் தன்பாலின ஈர்ப்பாளர் என்ற கமெண்ட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், இது போன்ற கமெண்ட்களை கேட்கும் போது ஒரு மாதியாக இருக்கும். ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. நான் தன்பாலின ஈர்ப்பாளர் கிடையாது என வெளிப்படையாக தெரிவித்துள்ளார் ஓவியா. இதனிடையில் விரைவில் துவங்கவுள்ள பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் ஓவியா போட்டியாளராக பங்கேற்க உள்ளதாகவும் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. இதற்காக அவரது ஆர்மியும் தயார் ஆகி வருகின்றனர்.

அமெரிக்கா ஏர்போர்ட்டில் விஜய்.. எல்லாம் ‘தளபதி 68’ படத்துக்காக: தீயாய் பரவும் புகைப்படம்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.