‘ஜவான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஷாருக் கானின் மாஸ் என்ட்ரியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் கலந்துகொண்ட யோகி பாபு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் இத்திரைப்படம் குறித்தும் ஷாருக்கானுடன் பணியாற்றியது குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசினர். அனிருத் ரசிகர்கள் மத்தியில் இறங்கி பாடல் பாடி பர்பாமன்ஸ் செய்ய உற்சாகத்தில் ஷாருக்கானும் மேடையில் அனிருத்துடன் டான்ஸ் ஆடி அரங்கை உற்சாகமடையச் செய்தார்.
இதையடுத்து பேசிய இயக்குநர் அட்லி, விஜய் பாணியில் குட்டி கதை ஒன்றை சொன்னார், “ஒரு குட்டி கதையாக சொல்லட்டுமா… ஒரு கர்ப்பமான மான். ஒரு முள் பக்கத்துல ஒரு தண்ணி ஓடைல இங்க குட்டி பெத்துக்கலாம்னு முடிவு பண்ணுச்சாம். ஆனா, பக்கத்துல புலி..! புலி வந்தா குட்டிய சாப்பிட்டுருமே… பக்கத்துல வேடன் வேற இருக்கான். இடி இடிச்சு காட்டு தீ பிடிச்சுருச்சு. அந்த மான் ஒரு நிமிஷம் கண்ணை மூடிருச்சு. வேடன் எய்த அம்பு அந்தப் புலிய குத்திருச்சு. இடி இடிச்சு மழை வந்து காட்டு தீ அணைந்திருச்சு. அந்த மான் தன்னோட குழந்தைய பத்திரமா பெத்துக்குச்சு. நம்ம அண்ணன் சொன்ன மாதிரி ‘Ignore negativity’ ” என்றார்.