Jawan: “கொஞ்சம் சிரமம்; ஆனா, நான் தளபதி ரசிகன்; சொன்னதை செய்வேன்" விஜய் பற்றி நெகிழ்ந்த அட்லி

அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்திருக்கும் ‘ஜவான்’ திரைப்படம் பல மொழிகளில் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இதில், விஜய் சேதுபது, நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர். அட்லி இயக்கும் முதல் பாலிவுட் திரைப்படம் இது

இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் அட்லி, “கடைசியா உங்க எல்லாரையும் பிகில் இசை வெளியீட்டு விழாவுல இதே இடத்துல பார்த்தேன். வீர முத்துவேல் சார் படிச்ச இதே இடத்துல தான் ஈவென்ட் நடத்தணும்னு முடிவு பண்ணேன். இந்தப் படம் நடக்க முக்கிய காரணம் என்னோட அண்ணன், என்னோட தளபதி, விஜய் சார்தான்.’ என்ன பண்ணுவன்னு தெரியாது இந்த படம் நீ பண்ணனும் ‘னு விஜய் அண்ணா சொன்னாரு. நான் ஷூட்டிங் போகும் போது ஷாருக்கான் ‘உன்ன பார்க்கணும்’னு சொன்னாருன்னு சொன்னாங்க.

ஜவான்

எந்திரன் படத்தோட ஷூட்டிங்ல ஷாருக்கான் சார் வீட்டு கதவு கிட்ட போட்டோ எடுத்தேன். மீண்டும் எனக்காக அதே கதவு திறந்துச்சு. ‘வெல்கம் அட்லி சார்’ னு என்னைய ஷாருக் வெல்கம் பண்ணினாரு. நான் 6 மாசத்துல படம் பண்ணி, 7வது மாசம் ரிலீஸ் பண்ணிடுவேன். இது எல்லாமே தளபதியாலதான். இந்த படம் நடக்கும் போது கோவிட் வந்துருச்சு. நம்ம தளபதியோட பேன், சொன்ன சொல்ல காப்பாத்தணும்.

விஜய் சேதுபதி பண்ணின மாதிரி வேற யாரும் பண்ண மாட்டாங்க. அவங்களுக்கு அந்த தைரியமில்ல. ஷாருக் சாருக்காக ‘ சிங்கமே’ன்னு ஒரு பாட்டு பண்ணி கொடுத்தாரு. இந்தில அந்த பாட்டோட பேரு தெரில. எனக்கு இந்தி தெரியாது. இந்த படத்துல 13 பாட்டு இருக்கு. யோகி பாபுவ எல்லாரும் டேட் தரமாற்றாங்கன்னு சொல்றாங்க. அவரு பல உதவி இயக்குநரோட நலனுக்காக பல விஷயங்கள் பண்றாரு” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.