ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகின்றது. நெல்சனின் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவான இப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதையடுத்து ரஜினி மற்றும் நெல்சனுக்கு தேவையான வெற்றியை ஜெயிலர் திரைப்படம் கொடுத்து அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தது. இந்நிலையில் இப்படம் வெளியான ஒரே வாரத்தில் 375 கோடி வசூலித்து சாதனை படைத்தது. மேலும் சமீபத்தில் இப்படம் உலகளவில் ஐந்நூறு கோடி வசூலை எட்டி தன் சாதனையை தொடர்ந்து வருகின்றது.
இணையத்தில் லீக்கான ஜெயிலர்
இதனை படக்குழுவே அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும் தற்போது என்னதான் புது புது படங்கள் வெளியானாலும் ஜெயிலர் படத்திற்கு இருக்கும் மவுசு குறைந்த பாடில்லை. மூன்று வாரங்களை கடந்தும் இப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் படக்குழுவை அதிர்ச்சியாக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
vijay in jawan event: ஜவான் ப்ரீ ரிலீஸ் விழாவில் விஜய் ? வேற லெவல் என்ட்ரி கொடுத்த தளபதி..!
அதாவது ஜெயிலர் படத்தின் HD இணையத்தில் லீக்காகியுள்ளது. பலரும் இதனை பார்த்து இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இன்னும் ஜெயிலர் படத்தின் OTT ரிலீஸை படக்குழு அறிவிக்காத நிலையில் அதற்கு முன்பே ஜெயிலர் HD பிரிண்ட் இணையத்தில் லீக்கானது படக்குழுவிற்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
அதிர்ச்சியான படக்குழு
இருந்தாலும் இதுபோன்ற செயல்கள் நடந்தாலும் ஜெயிலர் படத்தை திரையில் காண வரும் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாது என ஒரு சிலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் ஜெயிலர் திரைப்படம் திரையரங்கிற்கான திரைப்படம். அதனை திரையில் பார்த்தல் மட்டுமே அந்த அனுபவத்தை ரசிகர்களால் உணரமுடியும்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
படத்தில் நகைச்சுவை மற்றும் மாஸ் காட்சிகள் நிறைய இருப்பதால் படத்தை ரசிகர்கள் திரையில் பலமுறை பார்த்து வருகின்றனர். எனவே இணையத்தில் இப்படம் லீக்கானாலும் அது படத்தின் வசூலை பாதிக்காது என பேசி வருகின்றனர். இந்நிலையில் இப்படம் இணையத்தில் வெளியானதால் OTT வெளியீட்டை எப்போது அறிவிக்கலாம் என படக்குழு யோசித்து வருவதாகவும் ஒரு தகவல் வந்துள்ளது. இருப்பினும் இப்படத்தின் வசூல் நன்றாக இருப்பதால் தற்போதைக்கு OTT ரிலீஸ் பற்றி பாக்குழு யோசிக்காது எனவும் ஒரு தகவல் உலா வருகின்றது குறிப்பிடத்தக்கது.