சென்னை: அரசியல்வாதிகள் மீதான வழக்குகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஆட்சியாளர்களுக்கு ஏற்ப தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையான விஜிலென்ஸ் துறை பச்சோந்தியாக மாறியுள்ளது என ஓபிஎஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. கடந்த 2001 முதல் 2006 ஆண்டுக்கு இடையே அதிமுக ஆட்சியின்போது, அமைச்சராக இருந்த ஓபிஎஸ் மீது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.73 கோடி சொத்து சேர்த்ததாக, அடுத்து வந்த திமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. […]