சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இளையராஜாவின் வாரிசு என்ற பின்புலத்தில் சினிமாவில் அறிமுகமானாலும் தன்னுடைய தனிப்பட்ட திறமையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். பல சூப்பர்ஹிட் படங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளை கடந்து இவரது இசைப்பயணம் வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது. இன்றைய தினம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.